Srimad Rahasyatrayasaram - ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 28.த்வயாதிகாரம் (பத்தி 39)

ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 28.த்வயாதிகாரம்

“சரணம்” என்னும் பதத்திற்கு “திருவடிகளை மட்டுமே” என்பதைத் தேறும் பொருளாகக் கொள்ளல்

மூலம் – சரணௌ என்கிற இடத்தில் “தமேவ சரணம் கச்ச”, “கழல்களையே சரணாக”, “நாகணைமிசை நம்பிரான் சரணே சரண்” இத்யாதிகளிற்படியே அவதாரணம் விவக்ஷிதம்.

– “சரணௌ” என்னும் பதத்திற்கு, கீதை (18-62) - தமேவ சரணம் கச்ச – அவனுடைய திருவடிகளை மட்டுமே சரணம் புகுவாய் – என்றும், திருவாய்மொழி (5-8-11) - கழல்களையே சரணாக – என்றும், திருவாய்மொழி (5-10-11) - நாகணைமிசை நம்பிரான் சரணே சரண் – என்றும் கூறுவதற்கு ஏற்ப, “அவனுடைய திருவடிகளை மட்டுமே சரணம் என்று” என்பதே தேறுகின்ற பொருளாகக் கொள்ளவேண்டும்.