Srimad Rahasyatrayasaram - ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 28.த்வயாதிகாரம் (பத்தி 38)

ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 28.த்வயாதிகாரம்

ஸர்வேச்வரனுடைய திருமேனியில் திருவடிகளை மட்டுமே பற்றுவதன் காரணம்

மூலம் – சிதாலம்பநஸௌகர்ய க்ருபோத்தம்பகதாதிபி: உபாயத்வமிஹ ஸ்வாமி பாதயோரநுஸம்ஹிதம் இங்கு தாஸபூதன் ஔசித்யதிசயத்தாலும், அநதிக்ரமணீய ஹி சரண க்ரஹணம் என்கிறபடியே க்ருபோத்தம்பகத்வாதிசயத்தாலும், “தவாம்ருதஸ்யந்திந” இத்யாதிகளிற்படியே போக்யத்வாதிசயத்தாலும், திருவடிகளை அவலம்பிக்கிறான். இவ்வர்த்தம் “ஸர்வதா சரண த்வந்த்வம்”, “த்வத் பாதகமலாதந்யத்”, “மம தே பாதயோ: ஸ்திதம்”, “லோகவிக்ராந்த சரணௌ சரணம் தேவ்ரஜம் விபோ”, “ஸ ப்ராதுச் சரணௌ காடம்”, “தஸ்ய தாம்ரதலௌ தாத சரணௌ ஸுப்ரதிஷ்டிதௌ | ஸுஜாத ம்ருது ரக்தாபி: அங்குலீபிரலங்க்ருதௌ | ப்ரயதேந மயா மூர்த்நா க்ருஹீத்வா ஹி அபிவந்திதௌ”, “சரணௌ சரணம் யாத:”, “ப்ரபந்நாகௌக வித்வம்ஸி சரணௌ சரணம் கத:” இத்யாதிகளிலும் ப்ரஸித்தம். இவற்றை அடியொற்றினவர்களும் “உன்னடிக்கீழமர்ந்து புகுந்தேன்” என்றும், “த்வத்பாதமூலம் சரணம் ப்ரபத்யே” என்றும் அருளிச்செய்தார்கள். “ஸௌகந்த்ய ஸௌகுமார்யாதி குண விக்ரஹவாந் ஹரி: | தஸ்ய ஸ்வாத்ம ப்ரதாநே து ஸாதநம் ஸ்வபத த்வயம்” என்று அபியுக்தரும் ப்ரதிபாதித்தார்கள்.

– சிதாலம்பநஸௌகர்ய க்ருபோத்தம்பகதாதிபி: | உபாயத்வமிஹ ஸ்வாமி பாதயோரநுஸம்ஹிதம் – த்யானத்திற்கு வசதியான இலக்காக இருத்தல், அவனுக்குள்ள க்ருபையை அதிகரித்தல் போன்ற காரணங்களால், த்வய மந்த்ரத்தில், உபாயமாக உள்ள தன்மையானது ஸர்வேச்வரனுடைய திருவடிகளில் கொள்ளப்பட்டது. ஸர்வேச்வரனுடைய திருவடிகளானவை அவனுடைய அடிமையாக உள்ள ஜீவாத்மாவால் சரணம் புகத் தகுதியாக உள்ளதாலும், ஒருவனுடைய திருவடிகளைப் பற்றும்போது அவன் அதனைத் தாங்கமாட்டான் என்பதால் ஸர்வேச்வரனுடைய கருணையை நன்றாக வளரச் செய்யும் தன்மை திருவடிகளைப் பற்றும்போது உண்டாவதாலும், ஸ்தோத்ரரத்னம் (27) – தவ அம்ருதஸ்யந்திந – மோக்ஷத்தை அளிக்கவல்ல திருவடித்தாமரை – என்பதற்கு ஏற்ப இன்பம் அளிக்கவல்லதாக உள்ளதாலும், ஸர்வேச்வரனுடைய திருவடிகளைப் பற்றுகிறான். இந்தக் கருத்து கீழே உள்ள பல வரிகளிலும் வெளிப்படுகிறது: ஜிதந்தே (1-2) - ஸர்வதா சரண த்வந்த்வம் – எப்போதும் உனது இரண்டு திருவடிகளையே சரணம் அடைகிறேன் ஜிதந்தே (1-10) - த்வத் பாதகமலாதந்யத் – உனது இரண்டு திருவடித்தாமரைகள் (அல்லாமல் எனக்கு நன்மைகளைத் தரவல்லது ஏதும் இல்லை) ஜிதந்தே (1-13) - மம தே பாதயோ: ஸ்திதம் – எனது மனம் உனது திருவடிகளில் நிலையாக உள்ளது ஜிதந்தே - லோகவிக்ராந்த சரணௌ சரணம் தேவ்ரஜம் விபோ – உலகம் அளந்த உனது திருவடிகளே எனக்குச் சரணம் இராமாயணம் அயோத்யாகாண்டம் (31-27) - ஸ ப்ராதுச் சரணௌ காடம் – லக்ஷ்மணன் இராமனுடைய திருவடிகளை இறுகப் பிடித்து மஹாபாரதம் வனபர்வம் (160-135) - தஸ்ய தாம்ரதலௌ தாத சரணௌ ஸுப்ரதிஷ்டிதௌ | ஸுஜாத ம்ருது ரக்தாபி: அங்குலீபிரலங்க்ருதௌ | ப்ரயதேந மயா மூர்த்நா க்ருஹீத்வா ஹி அபிவந்திதௌ – சிவந்த உள்ளங்கால்கள், அழகான மெல்லிய சிவந்த விரல்கள் ஆகியவற்றுடன் கூடிய பகவானுடைய திருவடிகள் தூய மனதுடன் எனது சிரஸால் வணங்கப்பட்டன சரணௌ சரணம் யாத: - உனது திருவடிகளையே சரணம் என்று புகுந்தேன் ப்ரபந்நாகௌக வித்வம்ஸி சரணௌ சரணம் கத: - ப்ரபந்நர்களுடைய பாபங்களை அழிக்கவல்ல உனது திருவடிகளைச் சரணம் அடைந்தேன் இவற்றையே பின்பற்றுபவர்கள், திருவாய்மொழியில் (6-10-10) – உன் அடிக்கீழ் அமர்ந்து புகுந்தேன் – என்றும், ஸ்தோத்ரரத்னத்தில் (22) - த்வத்பாதமூலம் சரணம் ப்ரபத்யே – உனது திருவடிகளையே சரணம் என்று புகுந்தேன் – என்றும் கூறினர். இதனையே ஸ்வாமி பராசரபட்டர் போன்றவர்கள் - ஸௌகந்த்ய ஸௌகுமார்யாதி குண விக்ரஹவாந் ஹரி: | தஸ்ய ஸ்வாத்ம ப்ரதாநே து ஸாதநம் ஸ்வபத த்வயம் – ஸர்வேச்வரன் நல்ல மனம், மிகுந்த மென்மை போன்ற பல தன்மைகளுடன் கூடிய திருமேனியைக் கொண்டவன் ஆவான்; இப்படிப்பட்ட அவன் தன்னை அனுபவிக்கும்விதமாக அளிக்கும் இரண்டு திருவடிகளே உபாயமாக உள்ளன – என்பது போன்று அருளிச்செய்தார்கள்.