Srimad Rahasyatrayasaram - ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 28.த்வயாதிகாரம் (பத்தி 31)

ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 28.த்வயாதிகாரம்

த்வயத்தில் “ஸ்ரீமத்” என்பதுடன் “நாராயண” என்பதும் உள்ளதன் பலன்

மூலம் – இங்குற்ற நாராயண சப்தத்துக்கு மூலமந்த்ராதிகாரத்தில் வ்யுத்பத்திகளாலே சொன்ன அர்த்தங்களெல்லாம் விவக்ஷிதங்களாகிலும், பூர்வகண்டத்தில் நாராயண சப்தத்துக்கு சரண்யதையிலே நோக்கானபடியாலே “நிகரில் புகழாய்” இத்யாதிகளிலே ஸங்க்ருஹீதங்களான வாத்ஸல்ய ஸ்வாமித்வ ஸௌசீல்ய ஸௌலப்ய ஸர்வஜ்ஞத்வ ஸர்வசக்தித்வ ஸத்யஸங்கல்பத்வ பரமகாருணிகத்வ க்ருதஜ்ஞத்வ ஸ்திரத்வ பரிபூர்ணத்வ பரமோதாரத்வாதிகள் இங்கு அநுஸந்தேயங்களில் ப்ரதாநதமங்கள்.

– த்வய மந்த்ரத்தில் உள்ள “நாராயண” என்னும் பதத்திற்கான பொருள் அனைத்தும் திருமந்த்ரத்தில் உள்ள “நாராயண” என்னும் பதம் மூலமே கூறப்பட்டன என்றாலும், த்வயத்தில் உள்ள இந்தப் பதத்திற்கு “சரணம் அடையத்தக்கவன்” என்னும் பொருளே முதன்மையானதாகும். ஆகவே உபாயமாக இருப்பதற்குத் தேவையான குணங்களை மட்டுமே கூறுவதாகக் கொள்ளவேண்டும். அவற்றில் சில மிக்குயமான குணங்களாவன – பசு கன்றிடம் காண்பிப்பது போன்ற பரிவு (வாத்ஸல்யம்), எஜமானத்தன்மை (ஸ்வாமித்வம்), சிறந்த தன்மை (ஸௌசீல்யம்), எளிமையாக அடையக்கூடிய தன்மை (ஸௌலப்யம்), அனைத்தும் அறிந்த தன்மை (ஸர்வஜ்ஞத்வம்), அனைத்தும் வல்ல திறமை (ஸர்வசக்தித்வம்), தடையில்லாத உறுதி (ஸத்யஸங்கல்பத்வம்), அபாரமான கருணை (பரமகாருணிகத்வம்), செய்ந்நன்றி மறவாமை (க்ருதஜ்ஞத்வம்), உறுதி (ஸ்திரத்வம்), முழுமை (பரிபூர்ணத்வம்) மற்றும் எல்லையற்ற தாராளம் (பரமோதாரத்வம்) – ஆகும். இவற்றை, திருவாய்மொழி (6-10-10) – நிகரில் புகழாய் – என்பதில் காணலாம்.