Srimad Rahasyatrayasaram - ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 28.த்வயாதிகாரம் (பத்தி 30)
ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 28.த்வயாதிகாரம்
த்வயத்தில் “ஸ்ரீமத்” என்பதுடன் “நாராயண” என்பதும் உள்ளதன் பலன்
மூலம் – “ஸ்ரீதர: ஸ்ரீகர: ச்ரேய: ஸ்ரீமாந் லோகத்ரயாச்ரய:” இத்யாதிகளிலே பகவந்நாமமாகப் ப்ரஸித்தமான ஸ்ரீமச்சப்தமே அமையாதோ என்னில், பூர்வகண்டத்தில் உபாயபாவத்துக்கு உறுப்பான குணவிசேஷா நுஸந்தா நார்த்தமாகவும் உத்தரகண்டத்தில் ஸர்வவிசிஷ்டனான சேஷி ப்ராப்யனாயத் தோற்றுகைக்காகவும் நாராயண சப்தம் அபேக்ஷிதமாகையால், இங்கு ஸ்ரீமச்சப்தம் விசேஷணம்.
– ஸ்ரீவிஷ்ணுஸஹஸ்ரநாமம் (617-620) - ஸ்ரீதர: ஸ்ரீகர: ச்ரேய:ஸ்ரீமாந் லோகத்ரயாச்ரய: - மஹாலக்ஷ்மியைத் தரிப்பவன், அனைத்து அவதாரங்களிலும் தனக்கு ஏற்றவிதமாக அவளைக் கொள்பவன், அனைத்து பலனுக்காகவும் அடையப்படுபவளான பெரியபிராட்டியைப் பிரியாதவன், மூன்று உலகங்களாலும் அண்டப்படுபவன் – போன்றவற்றில், “ஸ்ரீமாந்” என்னும் பதமே நாராயணனைக் குறிக்கும்போது, தனியாக “நாராயண” என்று கூறவேண்டுமோ? விடை அளிப்போம். த்வயத்தின் முற்பகுதியானது உபாயத்தைக் கூறுவதால், ஸர்வேச்வரன் உபாயமாவதற்குத் தேவையான சில சிறப்பான குணங்களைச் சேதநன் எண்ணியபடி இருத்தல் வேண்டும்; அப்படிப்பட்ட குணங்களைக் கூறுவதால் அங்கு “நாராயண” என்பது அவசியமாகிறது; அப்போது “ஸ்ரீமாந்” என்பது “பெரியபிராட்டியுடன் எப்போதும் உள்ளவன்” என்னும் சிறப்பான குணத்தை மட்டுமே கூறுவதாகவும், திருநாமத்தைக் கூறுவதாக அமையவில்லை என்றும் கொள்ளவேண்டும். த்வயத்தின் இரண்டாவது வரியில், “அவன் அனைத்து குணங்களுடன் கூடிய எஜமானன்” என்று எண்ணப்படவேண்டும் என்பதால், “நாராயண” என்னும் பதம் அவசியமாகிறது; ஆக இங்கும் “ஸ்ரீமத்” என்னும் பதம் அந்த எஜமானத்தன்மையை உணர்த்தும் விசேஷணமாக உள்ளது. த்வயத்தின் முதல் வரியில் உள்ள “நாராயண” என்னும் பதம் மூலம் உணர்த்தப்படும் முக்கிய குணங்கள், அவற்றின் விளக்கம், பயன்கள்