Srimad Rahasyatrayasaram - ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 28.த்வயாதிகாரம் (பத்தி 29)

ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 28.த்வயாதிகாரம்

ஸர்வேச்வரனுடன் பிராட்டி உள்ள நித்யயோகம் குறித்த வாதங்களுக்குச் சமாதானமும் காரணமும்

மூலம் – இப்படி அபேக்ஷிதமான புருஷகாரந்தானும் தன்னேற்றமாம்படி யிருக்கின்றன, நாராயண சப்தத்தில் தோற்றுகிற ஸம்பந்தமும் குணங்களும். இது “தன்னடியார்” என்கிற பாட்டிலே காணலாம்.

– “நாராயண” என்னும் பதம் மூலம் கூறப்படும் ஸம்பந்தம் மற்றும் குணங்களைக் காணும்போது, “ஸர்வேச்வரனை அண்டுவதற்கு இந்த ஸம்பந்தம் மற்றும் குணங்களே போதுமானவை ஆகும். இதனுடன் சேர்ந்து பெரியபிராட்டியும் சிபாரிசு செய்யும்போது, அவன் நம்மைக் காப்பது குறித்துக் கூறவும் வேண்டுமோ?” என்று கூறலாம்படியாக அந்த ஸம்பந்தம் மற்றும் குணங்கள் உள்ளன. இதனை, பெரியாழ்வார் திருமொழி (4-10-2) – தன்னடியார் – என்னும் பாசுரத்தில் காணலாம்.