Srimad Rahasyatrayasaram - ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 28.த்வயாதிகாரம் (பத்தி 24)

ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 28.த்வயாதிகாரம்

ச்ரீணாதி என்பதன் பொருள்

மூலம் – ச்ரீணாதி ச குணைர்ஜகத் என்று நிருக்தியில் தன் காருண்யாதி குணங்களாலே “நின் திருவருளும் பங்கயத்தாள் திருவருளும் கொண்டு” இத்யாதிகளிற்படியே ஆச்ரிதர்க்குக் கைங்கர்ய பர்யந்த குணபரிபாகத்தை உண்டாக்கும் என்றதாம்.

“ஸ்ரீ” என்பது “ச்ரீணாதி ச குணைர்ஜகத் – தனது குணங்களால் அனைத்து லோகங்களையும் பக்குவப்படுத்துகிறாள்” என்று பொருள் அளிக்கும்போது, திருவாய்மொழி (9-2-1) - நின் திருவருளும் பங்கயத்தாள் திருவருளும் கொண்டு – என்பதற்கு ஏற்ப, கைங்கர்யத்தில் ஈடுபடும்படியாக அடியார்களுடைய குணத்தைப் பக்குவப்படுத்துகிறாள் என்று கொள்ளவேண்டும்.