Srimad Rahasyatrayasaram - ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 28.த்வயாதிகாரம் (பத்தி 23)
ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 28.த்வயாதிகாரம்
ச்ருணாதி என்பதன் பொருள்
மூலம் – ச்ருணாதி நிகிலாந் தேஷாந் என்று வ்யுத்பத்தியானபோது, “லக்ஷ்ம்யா ஸஹ ஹ்ருஷீகேசோ தேவ்யா காருண்ய ரூபயா ரக்ஷக: ஸர்வ ஸித்தாந்தே வேதாந்தேபி ச கீயதே” என்றும், “வேரி மாறாத பூமேலிருப்பாள் வினை தீர்க்குமே” என்றும் சொல்லுகிறபடியே, உபாயாதிகாரிகளுக்கு விரோதிகளான கர்மாதிகளைக் கழிக்குமென்றதாம்.
– “ஸ்ரீ” என்பது “ச்ருணாதி நிகிலாந் தோஷாந் – அனைத்து தோஷங்களையும் நீக்குகிறாள்” என்று பொருள் அளிக்கும்போது, லக்ஷ்மீ தந்த்ரம் (28-14) - லக்ஷ்ம்யா ஸஹ ஹ்ருஷீகேசோ தேவ்யா காருண்ய ரூபயா ரக்ஷக: ஸர்வ ஸித்தாந்தே வேதாந்தேபி ச கீயதே - கருணையே வடிவம் எடுத்தாற்போன்று இருக்கின்ற லக்ஷ்மியுடன் இருந்தபடியே ஸர்வேச்வரன் அனைத்தையும் ரக்ஷிக்கிறான் என அனைத்து ஸித்தாந்தங்களும் வேதாந்தங்களும் உரைக்கின்றன – என்றும், திருவாய்மொழி (4-5-11) - வேரி மாறாத பூமேலிருப்பாள் வினை தீர்க்குமே – தாமரையில் வீற்றிருந்து அடியார்களுடைய கர்மங்களை நீக்குவாள் – என்றும் கூறுவதற்கு ஏற்ப, உபாயத்தைக் கைக்கொள்ளும் தகுதி உடையவர்களுக்கு, அதுவரை உபாயத்தைக் கைக்கொள்ளத் தடையாக இருந்த கர்மங்களை நீக்குகிறாள் என்று கொள்ளவேண்டும்.