Srimad Rahasyatrayasaram - ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 28.த்வயாதிகாரம் (பத்தி 22)
ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 28.த்வயாதிகாரம்
ச்ருணோதி, ச்ராவயதி என்பவற்றின் பொருள்
மூலம் – மத்பத த்வந்த்வமேகம் ப்ரபத்யந்தே பராயணம் உத்தரிஷ்யாம்யஹம் தேவி ஸம்ஸாராத் ஸ்வயமேவ தாந் ஆந்ருசம்ஸ்யம் பரோ தர்ம: இத்யாதிகளை அவன் பக்கலிலே கேட்டு, ச்ருணு சாவஹித: காந்த யத்தே வக்ஷ்யாம்யஹம் ஹிதம் ப்ராணைரபி த்வயா நித்யம் ஸம்ரக்ஷ்ய: சரணாகத: என்று கபோதத்தைக் கபோதி கேட்பித்தாற்போலே, அவஸரத்திலே கேட்பிக்கு மென்னவுமாம். ஸர்வேச்வரன் பக்கலிலே லோக ஹிதத்தைக் கேட்டு, “மித்ரமௌபயிகம் கர்த்தும்” இத்யாதிகளிற்படியே விபரீதரையுங்கூடக் கேட்பிக்கு மென்னவுமாம்.
– வேறுவிதமாகவும் பொருள் கூறலாம். வராஹ புராணம் - மத்பத த்வந்த்வமேகம் ப்ரபத்யந்தே பராயணம் உத்தரிஷ்யாம்யஹம் தேவி ஸம்ஸாராத் ஸ்வயமேவ தாந் – தேவீ! எனது திருவடிகள் இரண்டையும் சிறந்த உபாயமாகப் பற்றுபவர்களை ஸம்ஸாரத்திலிருந்து நானே கரை ஏற்றுவேன் – என்றும், இராமாயணம் ஸுந்தரகாண்டம் (38-39) - ஆந்ருசம்ஸ்யம் பரோ தர்ம: - இரக்கம் கொள்வதே உயர்ந்த தர்மம் – என்றும் அவன் கூறுவதைக் கேட்கும் பிராட்டி, இதிஹாஸ ஸமுச்சயம் (8-40) - ச்ருணு சாவஹித: காந்த யத்தே வக்ஷ்யாம்யஹம் ஹிதம் ப்ராணைரபி த்வயா நித்யம் ஸம்ரக்ஷ்ய: சரணாகத: - (பெண் புறா ஆண் புறாவிடம்) உமக்கு நன்மையை அளிக்கவல்ல ஒன்றைக் கூறுகிறேன்; சரணம் புகுந்தவனை உம்முடைய உயிரைக் கொடுத்தாவது நீவிர் காக்கவேண்டும் – என்று பெண் புறா ஆண் புறாவிடம் கூறுவது போன்று, தகுந்த நேரம் பார்த்து உரைத்து, அவனைக் கேட்கும்படிச் செய்கிறாள். அல்லது மற்றொரு விதமாகவும் பொருள் கூறலாம் – ஸர்வேச்வரனிடமிருந்து உலகிற்கு நன்மையானவற்றைக் கேட்கிறாள் என்றும் கூறலாம். இராமாயணம் ஸுந்தரகாண்டம் (21-19) - மித்ரமௌபயிகம் கர்த்தும் – சீதை இராவணனிடம், “உனது இறப்பை நீ காப்பாற்ற எண்ணினால், இராமனுடன் தோழமை கொள்வாயாக”, என்றாள் – என்பதற்கு ஏற்ப, சேதநர்களை நன்மையான விஷயங்களைக் கேட்கும்படியும் செய்கிறாள்.