Srimad Rahasyatrayasaram - ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 28.த்வயாதிகாரம் (பத்தி 21)

ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 28.த்வயாதிகாரம்

ச்ருணோதி, ச்ராவயதி என்பவற்றின் பொருள்

மூலம் – ச்ருணோதி, ச்ராவயதி என்கிற வ்யுத்பத்திகளில் ஸாபராதரான அடியோங்களை ஸர்வேச்வரன் திருவடிகளிலே காட்டிக் கொடுத்தருள வேணுமென்று இப்புடைகளிலே ஆச்ரிதருடைய ஆர்த்தி த்வநியைக் கேட்டு ஸர்வேச்வரனுக்கு விண்ணப்பம் செய்து இவர்களுடைய ஆர்த்தியைச் சமிப்பிக்குமென்றதாம். புருஷகார க்ருத்யத்தைச் சொல்லுகிற இதுக்கும் புருஷகார பாவத்திலே நோக்கு.

– “ஸ்ரீ” என்பதற்கு ச்ருணோதி (கேட்பவள்), ச்ராவயதி (கேட்கும்படிச் செய்பவள்) என்று பொருள் கொள்ளும்போது, “ஸர்வேச்வரன் விஷயத்தில் பல அபராதங்களைச் செய்த எங்களை அவனுடைய திருவடிகளில் நாங்கள் சேரும்படிச் செய்யவேண்டும்” என்று இவ்விதமாக அவனை அண்டுபவர்கள் புலம்பும் ஒலியைக் கேட்கிறாள்; உடனே அவள் ஸர்வேச்வரனிடம் விண்ணப்பித்து, இவர்களுடைய புலம்பலை தணிக்கிறாள் என்று கருத்து. இவளுடைய புருஷகாரச் செயலைக் கூறும் பதங்களானவை, இவளுடைய புருஷகாரத் தன்மையையே கூறுகின்றன.