Srimad Rahasyatrayasaram - ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 28.த்வயாதிகாரம் (பத்தி 16)
ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 28.த்வயாதிகாரம்
ஸ்ரீயதே, ச்ரயதே என்பவற்றின் பொருள்
மூலம் – ஸாபேக்ஷனான புருஷனுக்கு அபேக்ஷிதம் தலைக்கட்டிக் கொடுக்கவல்ல சேதநன், அபிகம்யனாகைக்கு உபாயமாக வரிக்கப்பட்ட சேதநாந்தரத்தைப் புருஷகாரம் என்று வ்யவஹரிப்பார்கள். இப்புருஷகாரம் பலத்துக்குப் பரம்பரயா காரணம். அர்த்த ஸ்வபாவாநுஷ்டான லோகத்ருஷ்டி குரூக்திபி: ச்ருத்யா ஸ்ம்ருத்யா ச ஸம்ஸித்தம் கடகார்த்தாவலம்பநம் என்று இப்புருஷகாரபாவத்துக்குப் ப்ரமாணம் நிக்ஷேப ரக்ஷையிலே சொன்னோம்.
– விருப்பம் கொண்ட ஒருவனுக்கு, அவனுடைய விருப்பத்தை நிறைவேற்றிக் கொடுக்கவல்ல மற்றொருவனை உபாயமாகப் பற்றவேண்டும் என்று வேறு ஒருவன் சிபாரிசு செய்தலையே புருஷாகரம் என்பார்கள். இந்தப் புருஷகாரமே அடையப்படும் பலனுக்கான காரணமாக உள்ளது. இந்த புருஷகாரத் தன்மையைக் குறித்து, நிக்ஷேப ரக்ஷையில் - அர்த்த ஸ்வபாவாநுஷ்டான லோகத்ருஷ்டி குரூக்திபி: ச்ருத்யா ஸ்ம்ருத்யா ச ஸம்ஸித்தம் கடகார்த்தாவலம்பநம் – பொருள்களுடைய இயல்பு, முன்னோர்களுடைய செயல்பாடு, உலக வழக்கம், பூர்வர்களுடைய அருளிச்செயல்கள், வேதங்கள், ஸ்ம்ருதிகள் என்று பலவற்றாலும் புருஷகாரமாக உள்ளவர்களை அண்டவேண்டும் என்பது ஏற்பட்டது – என்று கூறினோம்.