Srimad Rahasyatrayasaram - ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 28.த்வயாதிகாரம் (பத்தி 13)

ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 28.த்வயாதிகாரம்

ஸ்ரீமந் நாராயண என்பதின் பொருளை உரைத்தல்

மூலம் – இதில் முற்பட “ஸ்ரீமந்நாராயண” என்று ஸர்வ சரண்யமான பரதத்த்வத்தைச் சொன்னபடி. ஸ்ரீய:பதித்வ லிங்கத்தாலும் நாராயண சப்தத்தாலுமிறே ச்ருதிகளில் பரதத்த்வ விசேஷ நிர்ணயம் பண்ணப்பட்டது. நாராயணன் சரண்யனாம்போது லக்ஷ்மீ விசிஷ்டனாயிருக்குமென்கைக்காகப் பூர்வகண்டத்தில் ஸ்ரீமச்சப்தம். ஆகாரிணஸ்து விஜ்ஞாநம் ஆகாரஜ்ஞாந பூர்வகம் தேநாகாரம் ச்ரியம் ஜ்ஞாத்வா ஜ்ஞாதவ்யோ பகவாந் ஹரி: என்று அருளாளப் பெருமாளெம்பெருமானார் அருளிச்செய்தார். இது உத்தர கண்டத்திற்போலே பூர்வகண்டத்திலும் விசேஷமென்னுமிடமும், உபாய விசேஷணங்களால் உபாயத்வம் வாராதென்னுமிடமும், ஸித்தோபாய சோதநத்திலே சொன்னோம்.

– த்வயத்தின் தொடக்கத்தில் உள்ள “ஸ்ரீமந்நாராயண” என்பது, அனைவரும் சரணம் புகத்தக்கபடி உள்ளதான பர தத்துவத்தைக் கூறுகிறது. ச்ருதிகளில் அவனுடைய பரத்வம் என்பது அவன் மக்ஷாலக்ஷ்மியின் நாயகனாக உள்ளதாலும், “நாராயண” என்னும் சப்தத்தாலும் நிர்ணயிக்கப்பட்டது. நாராயணன் உபாயமாக ஆகும்போது, மஹாலக்ஷ்மியிம் உபாயமாக உள்ளாள் என்பதையும், அவன் அப்போது தனது தன்மையுடன் (மஹாலக்ஷ்மி) உள்ளான் என்பதையும் த்வயத்தின் முற்பகுதியில் உள்ள “ஸ்ரீமத்” சப்தம் காண்பிக்கிறது. ஸ்வாமி அருளாளப் பெருமாளெம்பெருமானார் - ஆகாரிணஸ்து விஜ்ஞாநம் ஆகாரஜ்ஞாந பூர்வகம் தேநாகாரம் ச்ரியம் ஜ்ஞாத்வா ஜ்ஞாதவ்யோ பகவாந் ஹரி: - ஒரு பொருளுக்கு உரிய சிறப்பான தன்மையை அறிந்த பின்னரே, அந்தப் பொருளைக் குறித்து அறியவேண்டும். இதே போன்று மஹாலக்ஷ்மியைத் தனது சிறப்பான தன்மையாகக் கொண்டுள்ள ஸ்ரீஹரியை அறிவதற்கு முன்பாக, அந்தச் சிறப்பான தன்மையாகிய மஹாலக்ஷ்மியை அறிதல் வேண்டும் – என்றார். த்வயத்தின் முற்பகுதி, பிற்பகுதி ஆகிய இரண்டிலும் மஹாலக்ஷ்மியின் நிலை மாறாமல் உள்ளதையும், இருவருமே உபாயமாக உள்ளதைக் குறித்து எழுகின்ற ஐயங்களுக்கு அவசியம் இல்லாததையும் ஸித்தோபாய சோதந அதிகாரத்தில் கூறினோம்.