Srimad Rahasyatrayasaram - ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 28.த்வயாதிகாரம் (பத்தி 12)

ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 28.த்வயாதிகாரம்

த்வயத்தின் பொருளை நம்மாழ்வார் உரைத்தல்

மூலம் – இத் த்வயத்தின் அர்த்தத்தை நம்மாழ்வாரும் “திரு நாரணன் தாள் காலம் பெறச் சிந்தித்துய்ம்மினோ” என்றும், “முகில்வண்ணனடியை அடைந்து அருள்சூடி உய்ந்தவன்” என்றும், “அகலகில்லேன்” முதலான ப்ரதேசங்களிலும் அருளிச்செய்தார்.

– த்யவ மந்த்ரத்தின் ஆழ்பொருளை நம்மாழ்வார் திருவாய்மொழி (4-1-1) - திரு நாரணன் தாள் காலம் பெறச் சிந்தித்துய்ம்மினோ – என்றும், திருவாய்மொழி (7-2-11) – முகில்வண்ணன் அடியை அடைந்து அருள்சூடி உய்ந்தவன் – என்றும், திருவாய்மொழி (6-10-10) – அகலகில்லேன் – என்றும் உள்ள இடங்களில் அருளிச்செய்தார். த்வயத்தின் முற்பகுதி பொருள் விளக்கம்