Srimad Rahasyatrayasaram - ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 28.த்வயாதிகாரம் (பத்தி 11)
ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 28.த்வயாதிகாரம்
மூலம் – பரபக்த்யாதி மூலத்வம் கைங்கர்யஸ்ய யதுச்யதே கத்யாதிஷு ததப்யாஹு: அபவர்கதசாச்ரயம் உத்தரோத்தரயோ: ஸ்வாமி ஸாக்ஷாத்கரண போகயோ: பூர்வபூர்வ க்ஷணேஷ்டத்வாத் தந்மூலத்வமுதீரிதம் சரீர பாத காலே து ஹார்தஸ்யாநுக்ரஹ: ஸ்வயம் பரிபாகம் ப்ரபந்நாநாம் ப்ரயச்சதி ததாவிதம் அங்கோலதைல ஸிக்தாநாம் பீஜாநாமசிராத்யதா விபாக: பலபர்யந்த: ததா அத்ரேதி நிதர்சிதம் துஷ்டேந்த்ரிய வசாச்சித்தம் ந்ருணாம் யத்கல்மஷைர் வ்ருதம் ததந்தகாலே ஸம்சுத்திம் யாதி நாராயணாலயே இதி வ்ரதவிசேஷே யத் ஸாத்த்வதாதிஷு சிஷ்யதே தத்வதத்ரோபபத்யதே கத்யோக்தாந்த்ய தசாகம: அநுக்ரஹ விசேஷேண கேநசித் பரமாத்மந: குருகாதிச நாதாத்யா: ப்ராகப்யந்வபவந் ப்ரபும்
– பரபக்தி ஆதி மூலத்வம் கைங்கர்யஸ்ய யத் உச்யதே கத்யாதிஷு ததாபி ஆஹு: அபவர்கதசாச்ரயம் – கத்யம் போன்றவற்றில், கைங்கர்யத்திற்கு ப்ரபத்தி முதலானவற்றைக் காரணமாகக் கொண்ட எத்தகைய தன்மை கூறப்படுகிறதோ, அதனையும் மோக்ஷத்தை அடைந்த நிலை என்றே பூர்வர்கள் கூறினார்கள். உத்தரோத்தரயோ: ஸ்வாமி ஸாக்ஷாத்கரண போகயோ: பூர்வபூர்வ க்ஷணேஷ்டத்வாத் தந்மூலத்வமுதீரிதம் – பகவத் ஸாக்ஷாத்காரம் (பரஜ்ஞாநம்), தடையின்றி அவனை அனுபவித்தல் போன்ற நிலைகள் பின்னர் ஒரு காலகட்டத்தில் வருவதாகிலும், அவற்றைக் குறித்து முன்பே ஆசையுடன் எண்ணியபடி உள்ளதால், அவை பரபக்தியால் வருவதாகும் என்பர். சரீர பாத காலே து ஹார்தஸ்யாநுக்ரஹ: ஸ்வயம் பரிபாகம் ப்ரபந்நாநாம் ப்ரயச்சதி ததாவிதம் – சரீரத்தை விடும் காலம் வந்தவுடன், ஜீவாத்மாக்களுடைய இதயத்தில் உள்ள ஸர்வேச்வரனுடைய க்ருபை என்பது, அவர்கள் செய்த ப்ரபத்தியின் விளைவாக, பகவத் ஸாக்ஷாத்காரம் என்பதை அளிக்கிறது. அங்கோலதைல ஸிக்தாநாம் பீஜாநாமசிராத்யதா விபாக: பலபர்யந்த: ததா அத்ரேதி நிதர்சிதம் – அழிஞ்சிக் கொட்டையின் தைலத்தில் ஊற வைக்கப்பட்ட மற்ற விதைகளுக்கு, விரைந்து பழம் அளிக்கவல்ல திறன் உண்டாகிறது. இது போன்றே பகவத் கருணை என்பது ப்ரபத்தி செய்தவர்களுக்கு விரைவாக பரபக்தி, பரஜ்ஞாநம் மற்றும் பரமபக்தி ஆகியவற்றை அளிக்கிறது. துஷ்டேந்த்ரிய வசாச்சித்தம் ந்ருணாம் யத்கல்மஷைர் வ்ருதம் ததந்தகாலே ஸம்சுத்திம் யாதி நாராயணாலயே இதி வ்ரதவிசேஷே யத் ஸாத்த்வதாதிஷு சிஷ்யதே தத்வதத்ரோபபத்யதே கத்யோக்தாந்த்ய தசாகம: – மனிதர்களுடைய எந்த ஒரு மனமானது தீய இந்த்ரியங்களுக்கு வசமாக உள்ளதன் காரணமாகத் தோஷங்களால் நிறைந்துள்ளதோ, அதே மனம் ஸர்வேச்வரன் உறைகின்ற க்ஷேத்ரங்களில் வசிப்பதால், மரணம் அடையும் காலத்தில் மிகுந்த தூய்மையை அடைவதாக ஸாத்வம் போன்ற ஸம்ஹிதைகளில் கூறப்பட்டுள்ளது. இது போன்று மோக்ஷ உபாயமாகக் கூறப்பட்டுள்ளவற்றில் காணப்படும் அனைத்தும் கத்யத்தில் கூறப்படுவதால், கத்யத்தில் வெளிப்படுத்தப்படும் இறுதி நிலை என்பது பொருத்தமே ஆகும். அநுக்ரஹ விசேஷேண கேநசித் பரமாத்மந: குருகாதிச நாதாத்யா: ப்ராகப்யந்வபவந் ப்ரபும் – நம்மாழ்வார், நாதமுனிகள் போன்றவர்கள் ஸர்வேச்வரனுடைய மேன்மையான அனுக்ரஹம் காரணமாக, தாங்கள் தங்களுடைய சரீரத்தை விடுவதற்கு முன்பும் கூட பகவானை அனுபவித்தனர்.