Srimad Rahasyatrayasaram - ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 28.த்வயாதிகாரம் (பத்தி 5)

ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 28.த்வயாதிகாரம்

த்வயத்தை உபதேசம் பெறும் முறை

மூலம் – மந்த்ரராஜ இமம் வித்யாத் குருவந்தன பூர்வகம் குருரேவ பரம் ப்ரஹ்ம குருரேவ பரா கதி: குருரேவ பரா வித்யா குருரேவ பராயணம் குருரேவ பர: காமோ குருரேவ பரம் தனம் யஸ்மாத் தத் உபதேஷ்டாஸௌ தஸ்மாத் குருதரோ குரு: நாநுகூல்யம் ந நக்ஷத்ரம் ந தீர்த்தாதி நிஷேவணம் ந புரச் ச்ரவணம் நித்யம் ஜபம் வா அபேக்ஷதே ஹி அயம் நமஸ்க்ருத்ய குரும் தீர்க்க ப்ரணாமைஸ் த்ரிபிராதித: தத்பாதௌ க்ருஹ்ய மூர்த்நி ஸ்வே நிதாய விநயாந்வித: க்ருஹ்ணீயாந் மந்த்ரராஜானம் நிதிகாங்க்ஷீவ நிர்த்தன: லப்த்வைவ மந்த்ரராஜாநம் மாம் கச்சேச்சரணம் நர: அநேநைவ து மந்த்ரேண ஸ்வாத்மானம் மயி நிக்ஷிபேத் மயி நிக்ஷிப்த கர்தவ்ய: க்ருத க்ருத்யோ பவிஷ்யதி என்று ப்ரபத்தி மந்த்ராந்தரத்திற் சொன்ன குரு உபஸத்த்யாதிகள் இங்கும் வர ப்ராப்தம்.

– ஸாத்யகி தந்திரத்தில் – (மேலே மூலத்தில் உள்ள ச்லோகத்தின் பொருள்) – முதலில் குருவை வணங்கி, அதன் பின்னர் மந்த்ரங்களின் அரசனாக உள்ள இந்த மந்திரத்தை அறியவேண்டும். குருவே பரப்ரஹ்மம், உயர்ந்த வழி, உயர்ந்த கல்வி, உயர்ந்த உபாயம், உயர்ந்த பலன், உயர்ந்த செல்வம் ஆவார். உயர்ந்த மந்திரத்தை உபதேசிப்பதன் காரணமாக, அவரே உயர்ந்தவர். இந்த மந்த்ர உபதேசத்தைப் பெறுவதற்கு நல்ல நாள், நீராடுதல், ஹோமம் போன்றவை, அன்றாடம் கேட்டல், ஜபித்தல் போன்ற எதுவும் அவசியம் இல்லை. குருவை மூன்று முறை சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கி, அவருடைய திருவடிகளைத் தனது தலையில் ஏற்று, செல்வத்தை விரும்பும் ஏழை போன்று, வணக்கத்துடன் நின்று, இந்த மந்திரத்தை அறியவேண்டும்.இவ்விதம் மந்த்ரங்களுக்கு அரசனாகிய இந்த மந்த்ரத்தை அறிந்த பின்னர், என்னைச் சரணம் அடையவேண்டும். இந்த மந்த்ரத்தின் மூலம் தனது ஆத்மாவை என்னிடம் சமர்ப்பணம் செய்யவேண்டும். இவ்விதம் செய்த ஒருவன், தான் செய்யவேண்டியதைச் செய்தவன் ஆகிறான் – என்று உள்ளது. இங்கு ப்ரபத்தி மந்த்ரத்திற்குக் கூறப்பட்டதான குருவை அணுகி உபதேசம் பெறுதல் போன்றவை, த்வயத்திற்கும் பொருந்தும்.