Srimad Rahasyatrayasaram - ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 28.த்வயாதிகாரம் (பத்தி 2)
ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 28.த்வயாதிகாரம்
த்யவம் திருமந்த்ரத்தில் பொருளை விளக்குகிறது
மூலம் – திருமந்த்ரத்தில் மத்யம பதத்தில் ஆர்த்தமாகவாதல் சாப்தமாகவாதல் சொன்ன உபாய விசேஷத்தையும், இதின் பலமாகத் த்ருதீய பதத்திற் சொன்ன புருஷார்த்த விசேஷத்தையும் விசதமாக ப்ரகாசிப்பிக்கிறது த்வயம்.
– திருமந்த்ரத்தில் காணப்படும் “நம:” என்னும் நடுவில் உள்ள சொல்லானது நேரடியாகவும் தெளிவாகவும், திருமந்த்ரத்தில் உள்ள உபாய தன்மையை (ப்ரபத்தி) உணர்த்துகிறது; திருமந்த்ரத்தில் உள்ள மூன்றாவது சொல்லான “நாராயணாய” என்பது திருமந்த்ரத்தின் மூலம் கிட்டவல்ல பலனாகிய உயர்ந்த புருஷார்த்தத்தைக் கூறுகிறது; இந்த இரண்டையும் சேர்த்து த்வய மந்த்ரம் தெளிவாக உரைக்கிறது.