Srimad Rahasyatrayasaram - ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 28.த்வயாதிகாரம் (பத்தி 1)
ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 28.த்வயாதிகாரம்
ஆகர்ணிதோ விதநுதே க்ருதக்ருத்யகக்ஷ்யாம் ஆம்நேடிதோ திசதி யச்ச க்ருதார்த்த பாவம் ப்ரத்யூஷதாம் பஜதி ஸம்ஸ்ருதி காலராத்ரே: பத்மாஸஹாய சரணாகதி மந்த்ர ஏஷ:
– எந்த ஒரு மந்த்ரம் உபதேசம் மூலம் கேட்கப்பட்டதாகவும், அதனை உச்சரித்தால் செய்யவேண்டியதைச் செய்து முடித்த நிலையை உண்டாக்குவதாகவும், மீண்டும் மீண்டும் உச்சரிக்கப்படுவதாகவும், பலனைப் பெற்ற நிலையை அளிப்பதாகவும் உள்ளதோ, அத்தகைய த்வயம் என்னும் மந்த்ரமானது, தாமரையில் உதித்த மஹாலக்ஷ்மியின் நாயகனாகிய நாராயணனிடம் செய்யும் ப்ரபத்திக்கு உரிய மந்த்ரமான இருந்துகொண்டு, ஸம்ஸாரம் என்னும் அடர்ந்த இரவுப்பொழுதிற்கு, அதிகாலைப் பொழுதாக உள்ள தன்மையை அடைகிறது.