Srimad Rahasyatrayasaram - ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 27.மூலமந்த்ராதிகாரம் (பத்தி 133)
ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 27.மூலமந்த்ராதிகாரம்
இத்தம் ஸங்கடித: பதை: த்ரிபிரஸாவேக த்வி பஞ்சாக்ஷரை: அர்த்தைஸ் தத்த்வ ஹித ப்ரயோஜனமயை: அத்யாத்மஸாரைஸ் த்ரிபி: ஆத்யஸ் த்ரயக்ஷர வேதஸூதிரஜஹத் ஸ்தூலாதி வ்ருத்தி த்ரய: த்ரைகுண்ய ப்ரசமம் ப்ரயச்சதி ஸதாம் த்ரய்யந்தஸாரோ மநு:
– இப்படியாக ஒன்று, இரண்டு, ஐந்து எழுத்துக்கள் கொண்ட மூன்று சொற்களைக் (ஒன்று – ஓம், இரண்டு – நமோ, ஐந்து – நாராயணாய) கொண்டதாகவும், வேதாந்த ஸாரங்களாக உள்ளதான தத்வம் – ஹிதம் – புருஷார்த்தம் (உண்மை, நன்மை, பலன்) ஆகியவற்றை விளக்குவதாக அமைக்கப்பட்டதாகவும், மூன்று வ்யாபக மந்த்ரங்களில் முதன்மையானதாகவும் (ஓம் நமோ நாராயணாய, ஓம் நமோ விஷ்ணவே, ஓம் நமோ பகவதே வாஸுதேவாய), அ – உ – ம என்னும் மூன்று எழுத்துக்களைக் கொண்டதான ப்ரணவ வேதத்தைக் கொண்டதாகவும், ஸ்தூலம் – ஸூக்ஷ்மம் – பரம் என்னும் மூன்றின் பொருளை உள்ளடக்கிய “நம:” என்னும் சொல் கொண்டதாகவும், வேதாந்த ஸாரமான “நாராயண” என்னும் சொல்லைக் கொண்டதாகவும் உள்ள இந்தத் திருமந்த்ரமானது, முமுக்ஷுக்களுக்கு ஸம்ஸாரத்திலிருந்து விடுதலை அளிக்கிறது.