Srimad Rahasyatrayasaram - ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 27.மூலமந்த்ராதிகாரம் (பத்தி 132)

ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 27.மூலமந்த்ராதிகாரம்

உயர்ந்தனன் காவலன் அல்லார்க்குரிமை துறந்துயிராய் மயர்ந்தமை தீர்ந்து மற்றோர் வழியின்றி அடைக்கலமாய்ப் பயந்தவன் நாரணன் பாதங்கள் சேர்ந்து பழவடியார் நய்ந்த குற்றேவலெல்லாம் நாடு நன் மனுவோதினமே

– அனைவரைக் காட்டிலும் உயர்ந்தவனும், அனைத்தையும் காப்பவனும் ஆகிய பகவான் அல்லாமல் மற்ற யாருக்கும் அடிமையாக இருத்தலைத் தவிர்த்து, உயர்ந்த ஜீவனாக தன்னுடைய அறியாமை நீங்கப் பெற்று, மற்ற எந்தவிதமான உபாயமும் இன்றி, காப்பாற்றப்படவேண்டிய பொருள் என்னும் தகுதி பெற்று, அனைத்து உலகங்களையும் படைத்தவனாகிய நாராயணனுடைய திருவடிகளை மட்டுமே உபாயமாகப் பற்றி, எல்லையற்ற காலமாக அவனுக்கு மட்டுமே கைங்கர்யம் செய்தபடி உள்ள நித்யஸூரிகள் எப்போதும் விரும்பியபடி உள்ளதான பகவத் கைங்கர்யங்கள் அனைத்தையும் விண்ணப்பித்தல் என்பதை வெளிப்படுத்துவதான மிகவும் உயர்ந்த அஷ்டாக்ஷரத்தை நாம் எப்போதும் எண்ணியபடி உள்ளோம்.