Srimad Rahasyatrayasaram - ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 27.மூலமந்த்ராதிகாரம் (பத்தி 130)
ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 27.மூலமந்த்ராதிகாரம்
திருமந்த்ரம் அனைத்து பலன்களையும் அளித்தல்
மூலம் - (எட்டு மாகுணம்) – முக்தி தசையில் ஆவிர்பவிக்கும் குணாஷ்டகம், “அஷ்டௌ குணா: புருஷம் தீபயந்தி” இத்யாதிகளிற் சொன்னவையாகும். (எட்டெட்டெணும் கலை) – சதுஷ்ஷஷ்டி கலைகள். (எட்டிரத மேலதுவும்) – “ச்ருங்கார வீர கருணாத்புத ஹாஸ்ய பயானகா: பீபத்ஸ ரௌத்ரௌ ச ரஸா:” என்கிற ரஸங்களெட்டுக்கும் மேலான சாந்தி ரஸம். (எட்டினவே) – இவற்றில் இவனுக்கு இச்சையுள்ளபோது எட்டாதவை யொன்றுமில்லை. ஆத்மகுணாதிகள் நிரம்பாதொழிகிறது அநுஸந்தாநத்தில் ஊற்றம் போதாமையாலே, அஷ்டைச்வர்யாதிகள் வாராதொழிகிறது உபேக்ஷையாலே, கடுக ஸம்ஸாரம் நிவர்த்தியாதொழிகிறது இசைவில் குறைவாலே. ஆகையாலிறே, “நமோ நாராயணாயேதி மந்த்ர: ஸர்வார்த்த ஸாதக:” என்கிறது.
– ஒருவனுக்கு மோக்ஷம் உண்டாகும் நிலையில் எட்டுவிதமான குணங்கள் வெளிப்படுகின்றன. அவையாவன, மஹாபாரதம் உத்யோகபர்வம் (33-106) - அஷ்டௌ குணா: புருஷம் தீபயந்தி ப்ரஜ்ஞா ச கௌல்யம் ச தம: ச்ருதம் ச பராக்ரமச்ச அபஹுபாஷிதா ச தானம் யதாசக்தி க்ருதஜ்ஞதா ச – சரியான ஞானம், உயர்ந்த பிறவி, புலனடக்கம், வேத ஞானம், விரோதிகளை எதிர்க்கும் வல்லமை, அதிகமாகப் பேசாதிருத்தல், முடிந்தவரை தானம் செய்தல், செய்ந்நன்றி மறவாமை – என்னும் எட்டு குணங்கள் ஒருவனை மற்றவர்களைக் காட்டிலும் உயர்த்துகின்றன – என்பதில் கூறப்பட்டவை எனலாம். (எட்டெட்டெணும் கலை) – அறுபத்து நான்கு கலைகள் [இவை – ஆகும்]. (எட்டிரத மேலதுவும்) – அமரகோசம் (1-7-17) - ச்ருங்கார வீர கருணாத்புத ஹாஸ்ய பயானகா: பீபத்ஸ ரௌத்ரௌ ச ரஸா: - சிருங்காரம் (காதல்), வீரம், சோகம், அத்புதம், ஹாஸ்யம், பயம், இழிப்பு மற்றும் கோபம் – என்பதற்கு ஏற்ப உள்ளதான எட்டு ரஸங்கள், ஒன்பதாவது சாந்தி ரஸம். (எட்டினவே) – இவை அனைத்தையும் இவன் விரும்பும்போது, இவற்றில் கிட்டாதது ஒன்றும் இல்லை. ஒருவனுக்கு ஆத்மகுணம் உண்டாகாமல் இருப்பதற்கு அதனையே எண்ணியபடி இல்லாமல் இருத்தலால் ஆகும், எட்டு ஐச்வர்யங்கள் உண்டாகாமல் இருப்பதற்கு அவற்றில் கவனம் செலுத்தாததால் ஆகும், ஸம்ஸாரம் விரைந்து நீங்காமல் இருப்பதற்கு அதன் மீது உள்ள ஆசை குறையாமல் உள்ளதால் ஆகும். இதனால்தான், நாரதீயத்தில் (1-41) - நமோ நாராயணாயேதி மந்த்ர: ஸர்வார்த்த ஸாதக: - நமோ நாராயணா என்னும் மந்த்ரம் அனைத்து விருப்பங்களையும் பூர்த்தி செய்யவல்லது – எனப்பட்டது.