Srimad Rahasyatrayasaram - ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 27.மூலமந்த்ராதிகாரம் (பத்தி 129)
ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 27.மூலமந்த்ராதிகாரம்
திருமந்த்ரம் அனைத்து பலன்களையும் அளித்தல்
மூலம் – (எண் பத்தி) மத்பக்த ஜன வாத்ஸல்யம் பூஜயாம் சாநுமோதனம் மத்கதா ச்ரவணே பக்தி: ஸ்வர நேத்ராங்க விக்ரியா ஸ்வயமாராதனே யத்நோ மமார்த்தே டம்ப வர்ஜனம் மமாநுஸ்மரணம் நித்யம் யச்ச மாம் நோபஜீவதி பக்திரஷ்டவிதா ஹி ஏஷா என்கிற எட்டு விதங்களான பக்திகள். (எட்டு யோகாங்கம்) – யோகாங்கமாகச் சொல்லப்பட்ட யமநியமாதிகள். (எண் செல்வம்) – அணிமா மஹிமா ச ததா லதிமா கரிமா வசித்வமைச்வர்யம் ப்ராப்தி: ப்ராகாம்யம் சேத்யஷ்டைச்வர்யாணி யோக யுக்தஸ்ய என்கிற எட்டு விபூதிகள்.
– (எண் பக்தி) - கருட புராணம் (219-6, 7, 8) - மத்பக்தஜந வாத்ஸல்யம் பூஜாயாம் சாநுமோதநம் மத்கதா ச்ரவணே பக்தி: ஸ்வர நேத்ராங்கவிக்ரியா ஸ்வயமாராதநே யத்நோ மமார்த்தே டம்பவர்ஜநம் மமாநுஸ்மரணம் நித்யம் யச்ச மாம் நோபஜீவதி பக்திரஷ்டவிதா ஹி ஏஷா – என்னிடம் உள்ள பக்தி என்பது எட்டு வகைப்படும். அவையாவன: என் பக்தர்களிடம் உள்ள குறைகளைப் பொருட்படுத்தாமை; எனக்குச் செய்யும் பூஜையைக் கண்டு மகிழ்தல்; எனது சரிதங்களைக் கேட்பதில் ஆவல்; அவற்றைக் கேட்கும்போது குரல் தழுதழுத்து, மயிர்க்கூச்சல் எடுத்து, கண்ணீர் பெருகுதல்; தானும் ஆராதனை செய்தல்; எனது விஷயத்தில் ஆடம்பரம், டம்பம் இல்லாத தன்மை; எப்போது என்னை நினைத்தபடி இருத்தல்; என்னிடம் என்னைத் தவிர வேறு பலன் கேட்காமல் இருத்தல் – என்பதாகும் – என்று கூறுவதற்கு ஏற்ப உள்ள எட்டுவிதமான பக்திகள். (எட்டு யோகாங்கம்) – யோகத்தின் அங்கங்களாகச் கூறப்படும் யமம், நியமம், ஆசனம், ப்ராணாயாமம், ப்ரத்யாஹாரம், த்யானம், தாரணம், ஸமாதி ஆகியவை ஆகும். (எண் செல்வம்) – ஸாங்க்யகாரிகை - அணிமா மஹிமா ச ததா லதிமா கரிமா வசித்வமைச்வர்யம் ப்ராப்தி: ப்ராகாம்யம் சேத்யஷ்டைச்வர்யாணி யோக யுக்தஸ்ய – சரீரத்தைச் சுருக்குதல் [அணிமா], பெரியதாக்குதல் [மஹிமா], இலேசாக்குதல் [லதிமா], கனமாக்குதல் [கரிமா], அனைத்தையும் வசப்படுத்தல், அனைவருக்கும் தலைவனாக இருத்தல், விரும்பியதை அடைதல், விரும்பும் இடத்திற்குச் செல்லுதல் என்பவை எட்டு ஸித்திகள் ஆகும் – என்பதற்கு ஏற்ப உள்ள எட்டு செல்வங்கள்.