Srimad Rahasyatrayasaram - ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 27.மூலமந்த்ராதிகாரம் (பத்தி 128)
ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 27.மூலமந்த்ராதிகாரம்
திருமந்த்ரம் அனைத்து பலன்களையும் அளித்தல்
மூலம் – (எட்டு மாமலர்) அஹிம்ஸா ப்ரதமம் புஷ்பம் புஷ்பமிந்த்ரிய நிக்ரஹ: ஸர்வபூததயா புஷ்பம் க்ஷமா புஷ்பம் வேசிஷத: ஜ்ஞாநம் புஷ்பம் தப: புஷ்பம் த்யானம் புஷ்பம் ததைவ ச ஸத்யமஷ்டவிதம் புஷ்பம் விஷ்ணோ: ப்ரதீதிகரம் பவேத் என்கிற புஷ்பங்கள் (எண் சித்தி) ஊஹஸ் தர்கோ அத்யயனம் துக்கவிதாதாஸ் த்ரய: ஸுஹ்ருத் ப்ராப்தி: தானம் ச ஸித்தயோ அஷ்டௌ என்கிற எட்டு ஸித்தி
– (எட்டு மாமலர்) - அஹிம்ஸா ப்ரதமம் புஷ்பம் புஷ்பமிந்த்ரிய நிக்ரஹ: ஸர்வபூததயா புஷ்பம் க்ஷமா புஷ்பம் வேசிஷத: ஜ்ஞாநம் புஷ்பம் தப: புஷ்பம் த்யானம் புஷ்பம் ததைவ ச ஸத்யமஷ்டவிதம் புஷ்பம் விஷ்ணோ: ப்ரதீதிகரம் பவேத் – அஹிம்ஸை, இந்த்ரியங்களை அடக்குதல், அனைத்து உயிர்களிடமும் இரக்கம், பொறுமை, ஞானம், தவம், த்யானம் மற்றும் ஸத்யம் ஆகிய எட்டு மலர்களும் மஹாவிஷ்ணுவுக்கு மிகவும் பிடித்தவை ஆகும் – என்பதான எட்டு மலர்கள். (எண் சித்தி) – ஸாங்க்யகாரிகை (51) - ஊஹஸ் தர்கோ அத்யயனம் துக்கவிதாதாஸ் த்ரய: ஸுஹ்ருத் ப்ராப்தி: தானம் ச ஸித்தயோ அஷ்டௌ – கூறப்படாத விஷயங்களை ஊகித்து அறிதல், சொற்களின் மூலம் அறிதல், வேதங்களை அத்யயனம் செய்தல், தன்னாலும் தெய்வத்தாலும் மற்றவர்களாலும் என்று மூன்றுவிதமான துன்பங்கள் இல்லாமை, நல்லவர்கள் நட்பு, தானம் – என்பவை எட்டுவிதமான ஸித்திகள் ஆகும்.