Srimad Rahasyatrayasaram - ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 27.மூலமந்த்ராதிகாரம் (பத்தி 125)
ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 27.மூலமந்த்ராதிகாரம்
திருமந்த்ரத்தின் பெருமைகள்
மூலம் – (ii) ருசோ யஜும்ஷி ஸாமாநி ததைவாதர்வணாநி ச ஸர்வமஷ்டாக்ஷராந்த: ஸ்தம் யச்சாந்யதபி வாங்மயம் என்கையால், இத்திருவஷ்டாக்ஷரமே முமுக்ஷுக்களுக்குத் தத்த்வஹிதாநு பந்திகளான ஸர்வாபேக்ஷிதங்களுக்கும் ப்ரகாசகம். ருசோ யஜும்ஷி ஸாமாநி யோ அதீதே அஸக்ருதஞ்ஜஸா ஸக்ருதஷ்டாக்ஷரம் ஜப்த்வா ஸ தஸ்ய பலமச்நுதே என்கையாலே இதினுடைய ஸக்ருதுச்சாரணம் ஸர்வ வேத ஜப துல்யம்.
– (ii) நாரதீயம் (1-9) - ருசோ யஜும்ஷி ஸாமாநி ததைவாதர்வணாநி ச ஸர்வமஷ்டாக்ஷராந்த: ஸ்தம் யச்சாந்யதபி வாங்மயம் – ருக், யஜுர், ஸாமம், அதர்வணம் ஆகிய நான்கு வேதங்கள் மூலமும் அறியப்படக்கூடிய அனைத்தும், திருவஷ்டாக்ஷர மந்த்ரத்திலேயே அடங்கி உள்ளன – என்று கூறுவதால், இத்தகைய திருவஷ்டாக்ஷர மந்த்ரமே, மோக்ஷத்தில் விருப்பம் உள்ளவர்களுக்கு அவசியமான உண்மை மற்றும் நன்மைகளை அளிக்கவல்ல அனைத்து விருப்பங்களையும் உணர்த்துவதாகும். நாரதீயம் (1-10) - ருசோ யஜும்ஷி ஸாமாநி யோ அதீதே அஸக்ருதஞ்ஜஸா ஸக்ருதஷ்டாக்ஷரம் ஜப்த்வா ஸ தஸ்ய பலமச்நுதே – ருக், யஜுர், ஸாமம் ஆகிய மூன்று வேதங்களையும் பலமுறைப் பூர்ணமாக அத்யயனம் செய்தால் உண்டாகும் பலன், திருவஷ்டாக்ஷரத்தை ஒருமுறை ஜபித்தாலே கிட்டுகிறது – என்று கூறுவதால், திருவஷ்டாக்ஷரத்தின் ஒரு உச்சாடனம் என்பது, அனைத்து வேதங்களையும் ஓதியதற்குச் சமம் ஆகிறது.