Srimad Rahasyatrayasaram - ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 27.மூலமந்த்ராதிகாரம் (பத்தி 124)
ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 27.மூலமந்த்ராதிகாரம்
திருமந்த்ரத்தின் பெருமைகள்
மூலம் – (i) இத்திருமந்த்ரத்தில் அறுதியிட்ட பொருளே விஷ்ணு வாஸுதேவ சப்த விசிஷ்டங்களான வ்யாபக மந்த்ராந்தரங்களுக்கும் பொருள். வ்யாப்தி காந்தி ப்ரவேசேச்சா: தத்தத்தாது நிபந்தநா: பரத்வே அப்யதிகா விஷ்ணோ: தேவஸ்ய பரமாத்மந: என்று அஹிர்புத்ந்யாதிகள் நிர்வசனம் பண்ணினபடியே “விஷல் வ்யாப்தௌ, வச காந்தௌ, விச ப்ரவேசநே, இஷு இச்சாயாம்” என்கிற தாதுக்களிலே நிஷ்பந்நமான விஷ்ணு சப்தத்திலுள்ள பொருள்களும்; வாஸுதேவ சப்தத்திலும் “வஸதி வாஸயதி” என்றும், “தீவ்யதி” என்றும் தோற்றின ஸர்வ வ்யாபகத்வம், ஸர்வ ஆதாரத்வம், தத்கததோஷ ரஹிதத்வம், க்ரீடா விஜிகீஷாதிமத்த்வம் ஆகாரங்களுமெல்லாம் நாராயண சப்தார்த்தத்திலே ஏகதேசம்.
– “விஷ்ணு, வாஸுதேவன்” முதலான சொற்களை உள்ளடக்கிய வ்யாபக மந்த்ரங்களான “ஓம் நமோ விஷ்ணவே, “ஓம் நமோ பகவதே வாஸுதேவாய” ஆகியவை உணர்த்தும் ஆழ்பொருள்களானவை, திருமந்த்ரத்தில் உறுதிபட உரைக்கப்பட்ட பொருளே ஆகும். அஹிர்புத்ந்ய ஸம்ஹிதை (52-38) - வ்யாப்தி காந்தி ப்ரவேசேச்சா: தத்தத்தாது நிபந்தநா: பரத்வே அப்யதிகா விஷ்ணோ: தேவஸ்ய பரமாத்மந: - எங்கும் நிறைந்திருத்தல், ஒளியுடன் இருத்தல், உட்புகுந்திருத்தல், ஸங்கல்பம் ஆகிய பொருள்களைக் கொண்டதான அந்தந்த தாதுக்கள் (மூல சொற்கள்), ஸர்வேச்வரனைக் கூறும்போது அவனுடைய மேன்மை காரணமாக, அந்தந்த பொருள்களை மிகுதியாகக் காட்டுவதாகும் – என்றது காண்க. விஷல் வ்யாப்தௌ – “விஷ்” என்பது எங்கும் உள்ளதைக் குறிக்கும், விச ப்ரவேசநே – “வச்” என்பது ஒளிர்தலைக் குறிக்கும், விச ப்ரவேசநே – “விச்” என்பது உட்புகுதலைக் குறிக்கும், இஷு இச்சாயாம் – “இஷ்” என்பது இச்சையைக் குறிக்கும்; இந்த நான்கு தாதுக்களிலிருந்து உண்டான “விஷ்ணு” என்னும் பதத்தின் பொருளும், “வஸதி – அனைத்திலும் உட்புகுந்து நிற்பவன், வாஸயதி – தன்னுள் அனைத்தையும் இருக்கும்படிச் செய்பவன், தீவ்யதி - ஒளிர்தல்” என்னும் தாதுக்களிலிருந்து உண்டான “வாஸுதேவ” என்னும் பதத்தின் பொருளும் – அவன் அனைத்தையும் தாங்கி நிற்பவன், அனைத்துடனும் தொடர்பு கொண்டிருந்தாலும் அவற்றின் தோஷங்களால் தீண்டப்படாதவன், அனைத்தையும் ஒரு லீலையாகவே செய்பவன், அனைத்தையும் வெல்லக்கூடியவன் – போன்றவற்றை உணர்த்தி, இவை “நாராயண” என்னும் பதத்தின் ஒரு சில பகுதிகளில் காணப்படுவதாகவும் உள்ளன.