Srimad Rahasyatrayasaram - ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 27.மூலமந்த்ராதிகாரம் (பத்தி 122)
ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 27.மூலமந்த்ராதிகாரம்
ததேவம் பத வாக்யார்த்தை: தத்வவித் குரு தர்சிதை: தத் தத் குத்ருஷ்டி கதிதம் நிரஸ்தம் யோஜநாந்தரம்
– ஆகவே இப்படியாக மெய்ப்பொருளை அறிந்த பூர்வாசார்யர்களால் உபதேசிக்கப்பட்ட பதங்கள், வாக்கியங்கள் ஆகியவற்றின் ஆழ்பொருள் முலமாக திருமந்த்ரத்துக்கு வேறு பொருள் உரைக்கும் அந்தந்த மதங்களின் மற்ற கருத்துக்கள் தள்ளப்பட்டன.