Srimad Rahasyatrayasaram - ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 27.மூலமந்த்ராதிகாரம் (பத்தி 121)

ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 27.மூலமந்த்ராதிகாரம்

திருமந்த்ரத்தைக் குறித்த பத்துவிதமான கருத்துக்களின் சுருக்கம்

மூலம் – இப்படித் திருமந்த்ரம் ஏகவாக்யமானபோது (1) உபாய பரமென்றும், (2) வ்ருத்தி பரமென்றும்; வாக்ய த்வயமானபோது (3) ஸ்வரூப பரமென்றும், (4) அந்வய வ்யதிரேக முகேந ஸமர்ப்பண பரமென்றும், (5) புருஷார்த்த ப்ரார்த்தநா பரமென்றும்; வாக்ய த்ரயமானபோது (6) முதலிரண்டு பதமும் ஸ்வரூபமாய் மேல்பதம் புருஷார்த்த ப்ரார்த்தநா பரமென்றும், (7) ப்ரணவம் ஸ்வரூப பரமாய் மேல் இரண்டு பதமும் அநிஷ்ட நிவ்ருத்தி இஷ்ட ப்ராப்தி ப்ரார்த்தநா பரமென்றும்; இக்கட்டளையிலே (8) ப்ரதம பதம் ஸ்வரூப பரமாய் மேலிரண்டு பதமும் உபாய பரமென்றும், (9) ப்ரதம பதம் ஸமர்ப்பண பரமாய் மேலிரண்டு பதமும் பல ப்ரார்த்தநா பரமென்றும், (10) பத த்ரயமும் அடைவே தத்வ உபாய புருஷார்த்த ப்ரார்த்தநா பரமென்றும் அநந்தார்த்த கர்ப்பமான இத்திருமந்த்ரத்தில் வாக்யார்த்தத்தைப் பத்துப்படியாக யதா ஸம்ப்ரதாயம் அநுஸந்திப்பார்கள். இப்படிச் சிலவற்றைப் ப்ரதாநமாக அநுஸந்தித்தாலும் மற்றுள்ளவையும் ஆர்த்தமாகக் கடவது. ததேவம் பத வாக்யார்த்தை: தத்வவித் குரு தர்சிதை: தத் தத் குத்ருஷ்டி கதிதம் நிரஸ்தம் யோஜநாந்தரம்

– எண்ணற்றவிதத்தில் கூறலாம்படியான கருத்துக்களைத் தன்னுள் அடக்கியுள்ள திருமந்த்ரத்தைக் குறித்து பல ஆசார்யர்கள், தங்கள் தங்கள் ஸம்ப்ரதாயத்தின்படி கீழே உள்ள பத்துவிதமான கருத்துக்களை உரைக்கிறார்கள் (இவற்றையே மேலே இதுவரை நாம் விரிவாகப் பார்த்தோம்). அவையாவன: திருமந்த்ரம் ஒரே வாக்கியம் என்று கொள்ளப்படும்போது, அது (1) ஜீவாத்மாவின் ஸ்வரூபத்தை உணர்த்துகிறது. (2) அவன் ஸர்வேச்வரனுக்கு அடிமையாக இருந்து செய்பவற்றைக் கூறுகிறது. இரண்டு வாக்கியங்களாக கொள்ளப்படும்போது, அது (1) ஜீவாத்மாவின் ஸ்வரூபத்தை உணர்த்துகிறது. (2) உடன்பாடாகவும் எதிர்மறையாகவும் (என்னைக் காக்கும் பொறுப்பு அவனுடையது, அது என்னுடையது அல்ல என்று) ஆத்மாவைச் சமர்ப்பணம் செய்தலைக் கூறுகிறது. (3) புருஷார்த்த விண்ணப்பத்தைக் கூறுகிறது. மூன்று வாக்கியங்களாகக் கொள்ளப்படும்போது, (1) முதல் இரண்டு பதங்களும் ஆத்ம ஸ்வரூபத்தையும், மூன்றாம் பதம் புருஷார்த்த விண்ணப்பத்தையும் கூறுகிறது. (2) முதல் பதமான ப்ரணவம் ஆத்ம ஸ்வரூபத்தையும், மற்ற இரண்டு பதங்களும் விருப்பம் அல்லாதவற்றை விலக்குதல் மற்றும் விருப்பமானவற்றை அளித்தல் என்னும் விண்ணப்பத்தை உள்ளடக்கியதையும் கூறுகிறது. (3) முதல் பதமான ப்ரணவம் புருஷார்த்த விண்ணப்பத்தையும், அடுத்த இரண்டு பதங்களை அந்தப் புருஷார்த்தத்தை அடைவிக்கச்செய்யும் உபாயத்தையும் கூறுகிறது. (4) முதல் பதமான ப்ரணவம் ஆத்ம சமர்ப்பணத்தையும், அடுத்த இரண்டு பதங்கள் அத்தகைய சமர்ப்பணத்தால் உண்டாகும் பலனுக்கான விண்ணப்பத்தையும் கூறுகிறது. (5) மூன்று பதங்களும் முறையே தத்வம், உபாயம், புருஷார்த்தம் ஆகியவற்றைக் கூறுகின்றன. மேலே கூறப்பட்டபடி உள்ள கருத்துக்களை முதன்மையாகக் கொண்டாலும், மேலும் வெளிப்படும் பலவிதமான கருத்துக்களைத் துணைக்கருத்துகளாகக் கொள்ளலாம்.