Srimad Rahasyatrayasaram - ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 27.மூலமந்த்ராதிகாரம் (பத்தி 119)

ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 27.மூலமந்த்ராதிகாரம்

விருப்பம் அல்லாதவற்றை நீக்கவேண்டும் என்னும் ப்ரார்த்தனை விருப்பமானவற்றை தானாகவே அளித்தாலும், அதனைத் தனியாக விண்ணப்பிப்பதன் காரணங்கள்

மூலம் – (10) இத்திருமந்த்ரத்தில் ஸ்வரூப உபாய புருஷார்த்தங்கள் மூன்றும் அடைவே சப்தமாகவுமாம். அப்போது ப்ரணவம் ஸ்வரூப பரம், நமஸ்ஸு உபாய பரம், சேஷம் புருஷார்த்த ப்ரார்த்தநா பரம். இம்மூன்றின் விரிவெல்லாம் அத்யாத்ம சாஸ்த்ரங்களைக் கொண்டு தெளிந்து இங்கே அநுஸந்தேயம்.

– (10) திருமந்த்ரம் என்பது ஸ்வரூபம், உபாயம், புருஷார்த்தம் ஆகிய மூன்றையும் குறிக்கிறது. இவ்விதம் கொள்ளும்போது, ப்ரணவம் என்பது ஸ்வரூபத்தையும், “நம:” என்பது உபாயத்தையும், எஞ்சியுள்ளதான “நாராயணாய” என்பது புருஷார்த்தத்திற்கான ப்ரார்த்தனை என்றும் கொள்ளப்படலாம். இந்த மூன்றைக் குறித்த விளங்கங்களை வேதாந்த சாஸ்த்ரங்களைக் கொண்டு தெளிவாக அறியலாம்.