Srimad Rahasyatrayasaram - ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 27.மூலமந்த்ராதிகாரம் (பத்தி 118)

ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 27.மூலமந்த்ராதிகாரம்

விருப்பம் அல்லாதவற்றை நீக்கவேண்டும் என்னும் ப்ரார்த்தனை விருப்பமானவற்றை தானாகவே அளித்தாலும், அதனைத் தனியாக விண்ணப்பிப்பதன் காரணங்கள்

மூலம் – (9) கேசித்து சரம ச்லோகே த்வயே சோக்த க்ரமாதிஹ பரந்யாஸபரம் தாரம் சேஷம் பலபரம் விது:

– (9) ஒரு சில ஆசார்யர்கள், சரமச்லோகம் மற்றும் த்வயம் ஆகிய இரண்டிலும் கூறப்பட்டது போன்றே திருமந்த்ரத்திலும், ப்ரணவம் என்பது பரந்யாஸத்தையே குறிக்கிறது என்றும், மற்ற இரண்டு பதங்களும் (நாராயண, நம:) அதன் பலனை உரைப்பதாகவும் கூறுகிறார்கள்.