Srimad Rahasyatrayasaram - ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 27.மூலமந்த்ராதிகாரம் (பத்தி 116)
ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 27.மூலமந்த்ராதிகாரம்
விருப்பம் அல்லாதவற்றை நீக்கவேண்டும் என்னும் ப்ரார்த்தனை விருப்பமானவற்றை தானாகவே அளித்தாலும், அதனைத் தனியாக விண்ணப்பிப்பதன் காரணங்கள்
மூலம் – இப்படி ஸ்வரூபமும், புருஷார்த்த ப்ரார்த்தனமும் சப்தமானால் இப் புருஷார்த்தத்துக்கு ஸாதநமாக சாஸ்த்ர விகஸிதமான ஸாத்யோபாயமும் பரந்யாஸ பர்யந்தமாக அகிஞ்சநனுக்கு அநிஷ்ட நிவ்ருத்தியைச் சொல்லுகிற நமஸ்ஸிலே ஆர்த்தமாக அநுஸந்தேயம்.
– இவ்விதம் ஆத்மஸ்வரூபம் மற்றும் புருஷார்த்தத்திற்கான ப்ரார்த்தனை ஆகிய இரண்டும் அந்தந்த சொற்களாலேயே உணர்த்தப்படுகிறது என்றால் – “மற்ற ஏதும் துணையில்லை என்று அனைத்தையும் கைவிட்டு, பகவானிடம் சரணம் என்று புகுகின்ற ஒருவனுடைய விருப்பம் அல்லாதவை அனைத்தும் விலகுகின்றன” என்பதை உணர்த்தும் “நம:” என்னும் பதமானது, சாஸ்த்ரங்களில் கூறப்பட்டதும் புருஷார்த்தத்திற்குத் தேவையான உபாயமாக உள்ளதும் ஆகிய ஸாத்யோபாயத்தையும் மறைமுகமாகக் கூறுகிறது என்று கருத்து.