Srimad Rahasyatrayasaram - ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 27.மூலமந்த்ராதிகாரம் (பத்தி 115)

ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 27.மூலமந்த்ராதிகாரம்

விருப்பம் அல்லாதவற்றை நீக்கவேண்டும் என்னும் ப்ரார்த்தனை விருப்பமானவற்றை தானாகவே அளித்தாலும், அதனைத் தனியாக விண்ணப்பிப்பதன் காரணங்கள்

மூலம் – ஸர்வாநிஷ்ட நிவ்ருத்தி பிறந்தால் பாஷாண கல்பத்வாதி மதாந்தர சங்கை வாராமைக்காகவும், பகவத் ப்ராப்தியில் இந்த்ராதி ப்ராப்தியிற்போலே துக்க ஸம்பந்தமில்லை என்று தோற்றுவிக்கையில் தாத்பர்யத்தாலும் பிரித்துச் சொல்லுகிறதாகவுமாம்.

– தார்க்கிகமதம் போன்றவற்றில், மோக்ஷம் என்பது விருப்பம் அற்ற அனைத்தும் விலகப் பெற்று, எந்தவிதமான சுகமோ துக்கமோ பீடிக்காதவிதத்தில் ஒரு கல் போன்று ஆவதே மோக்ஷம் ஆகும் என்று கூறுவர். நம்முடைய ஸித்தாந்தத்தில், மோக்ஷம் என்பது அது போன்றதோ என்னும் ஐயத்தை விலக்கும் பொருட்டும், மோக்ஷம் என்பது உயர்ந்த ஆனந்தம் அளிக்கவல்லது என்பதை உணர்த்தும் பொருட்டும் – பகவானை அடைதல் என்பதான மோக்ஷத்தில், இந்த்ரன் முதலான பதவிகளை அடைந்தால் உண்டாகும் மகிழ்ச்சி போன்றும் அல்லது எந்தவிதமான துக்கமும் உண்டாவதில்லை (பேரானந்தம் மட்டுமே உண்டாகும்) என்பதை உணர்த்துவதற்காகப் பிரித்துக் கூறப்பட்டது எனலாம்.