Srimad Rahasyatrayasaram - ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 27.மூலமந்த்ராதிகாரம் (பத்தி 114)
ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 27.மூலமந்த்ராதிகாரம்
விருப்பம் அல்லாதவற்றை நீக்கவேண்டும் என்னும் ப்ரார்த்தனை விருப்பமானவற்றை தானாகவே அளித்தாலும், அதனைத் தனியாக விண்ணப்பிப்பதன் காரணங்கள்
மூலம் – பகவந் நிக்ரஹாதி நிவ்ருத்தியும் ஜீவனுடைய ஜ்ஞாந விகாஸாதிகளும் வேறாகையாலே பிரிய அபேக்ஷிக்கிறதாகவுமாம். ஜ்ஞாந ஸங்கோசாதிகளுக்கு ஹேதுவான பகவந் நிக்ரஹாதிகளுடைய நிவ்ருத்தியும், நிக்ரஹ பலமான ஜ்ஞாந ஸங்கோசாதிகளுடைய நிவ்ருத்தியான ஜ்ஞாந விகாஸ கைங்கர்யாதிகளும் வேறுபட்டவையாகையாலே பிரிய அபேக்ஷிக்கக் குறையில்லையிறே.
– நாம் செய்த செயல்களுக்கான பகவானின் தண்டனையிலிருந்து விலகுதல், ஜீவாத்மாவுக்கு மறைக்கப்பட்டிருந்த ஞானம் மலர்தல் ஆகிய இரண்டும் வெவ்வேறு என்பதால், இந்த இரண்டும் தனித்தனியேதான் விண்ணப்பிக்கப்படவேண்டும். ஜீவாத்மாவுக்கு இயல்பான ஞானம் மறைதல் என்பதறுகு பகவான் அளிக்கும் தண்டனையே காரணமாகும்; இப்படி உள்ளபோது அந்தத் தண்டனை நீங்குதல் என்பதும், அந்தத் தண்டனையின் காரணமாக உண்டான ஞானச்சுருக்கம் மறைதல் என்பதான ஞானமலர்ச்சி மற்றும் பகவத் கைங்கர்யம் என்பவைகளும் வெவ்வேறு என்பதால், இரண்டையும் தனித்தனியே விண்ணப்பம் செய்வதில் எந்தவிதமான குறையும் இல்லை.