Srimad Rahasyatrayasaram - ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 27.மூலமந்த்ராதிகாரம் (பத்தி 113)

ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 27.மூலமந்த்ராதிகாரம்

விருப்பம் அல்லாதவற்றை நீக்கவேண்டும் என்னும் ப்ரார்த்தனை விருப்பமானவற்றை தானாகவே அளித்தாலும், அதனைத் தனியாக விண்ணப்பிப்பதன் காரணங்கள்

மூலம் – ஆனாலும் பாவாந்தராபாவத்தில் ஸர்வாநிஷ்ட நிவ்ருத்தி தானே இஷ்டப்ராப்தியா யிருக்கத் தனித்துச் சொன்னால் புநருக்தி வாராதோ? “அவித்யா நிவ்ருத்திரேவ ஹி மோக்ஷ:” என்று ஸ்ரீபாஷ்யகாரரும் அருளிச் செய்திலரோவென்னில், ஏகமேவ ஸ்வரூபேண பரேண ச நிரூபிதம் இஷ்ட ப்ராப்திரநிஷ்டஸ்ய நிவ்ருத்திச்சேதி கீர்த்யதே ஒன்று தன்னையே ஸ்வரூபத்தாலும் ப்ரதியோகியாலும் நிரூபித்துப் ப்ரயோஜந விசேஷ அபிஸந்தியாலே பிரியச் சொல்லக்கடவதாயிருக்கும். ஸம்ஸார தசையில் ஒரு ப்ரதிகூல நிவ்ருத்தி ப்ரதிகூலாந்தரமாயும் அநுகூல ப்ரதிகூல உபயநிவ்ருத்தியாயுமிருக்கும். இங்கு ஸர்வப்ரதிகூல நிவ்ருத்தியாகையாலே மேல் முழுக்க அநுகூலமேயாயிருக்கும். ஆகையால் பூர்வாவஸ்தையினுடைய அநிஷ்டதமத்வத்தையும் கேவலாநுகூல ரூபையான உத்தராவஸ்தையினுடைய இஷ்டதமத்வத்தையும் தோற்றுவிக்கைக்காக ஆதராதிசயத்தாலே பிரிய அபேக்ஷிக்கிறது.

– ஆனால் விசிஷ்டாத்வைதத்தில் ஒரு வஸ்து இல்லை என்று உரைக்கும்போது, அது மற்றொரு வஸ்து உள்ளதைக் குறிக்கும் அல்லவோ (இது “பாவாந்தர அபாவம்” என்னும் பதத்தால் கூறப்படுகிறது. “மரத்தில் பறவை இல்லை” என்றால் “மரம் உள்ளது” என்பது தேறுகிறது)? இதே போன்று விருப்பம் அல்லாதவைகள் அனைத்தும் விலகும்போது, விருப்பமானவை தானாகவே வந்து சேரும்; இதனை விடுத்து, “விருப்பமானவை வரவேண்டும்” என்று தனியாக உரைத்தாக், “கூறியது கூறல்” என்னும் புநருக்தி தோஷம் வரும் அல்லவோ என்று கேட்கலாம். மேலும், ஸ்ரீபாஷ்யத்தில் (லகு ஸித்தாந்தம்) - அவித்யா நிவ்ருத்திரேவ ஹி மோக்ஷ: - அவித்யை என்னும் முன் செய்த கர்மங்கள் விலகுவதே மோக்ஷம் – என்று எம்பெருமானாரும் உரைத்தார் அல்லவோ (கர்மங்கள் விலகினால் தானாகவே மோக்ஷம் ஏற்படும், தனியாக உரைக்கத் தேவையில்லை அல்லவோ)? இதற்கான விடையை அருளிச்செய்கிறார். ஏகமேவ ஸ்வரூபேண பரேண ச நிரூபிதம் இஷ்ட ப்ராப்திரநிஷ்டஸ்ய நிவ்ருத்திச்சேதி கீர்த்யதே – ஒரு வஸ்து அதனுடைய இயல்பான தன்மை மூலமும், அதற்கு எதிரான தன்மை உள்ள மற்றொன்றின் மூலமும் விளக்கப்படுவது போன்று, “விருப்பமானவற்றை அடைதல், விருப்பம் அல்லாதவை நீங்குத” என்று தனித்தனியாக உரைக்கப்படுகிறது. ஒரு குறிப்பிட்ட நிலையை உணர்த்தும் பொருட்டு, ஒரு வஸ்துவின் இயல்பான தன்மை, அதற்கு விரோதமாக உள்ள தன்மை ஆகிய இரண்டையும் தனித்தனியே பிரித்து உரைப்பர். ஸம்ஸாரத்தில் உள்ளபோது, விருப்பம் அல்லாத ஒன்று விலகுதல் என்பதும் விருப்பம் அல்லாத ஒரு நிகழ்வாகவே இருக்கலாம்; அல்லது விருப்பம் உள்ள ஒன்று விலகுவதும், விருப்பம் அல்லாத ஒன்றூ விலகுவதும் ஒரே போன்று இருக்கலாம். ஆனால் மோக்ஷ நிலையில், விருப்பம் அல்லாதவை விலகுதல் என்பது முற்றிலுமாக விருப்பம் உள்ள நிகழ்வே ஆகும். ஆகவே, முதலில் உரைக்கப்பட்ட ஸம்ஸாரம் என்பது விரும்பத்தக்கது அல்ல என்றும், அடுத்து உரைக்கப்பட்ட மோக்ஷம் என்பது விருப்பம் அல்லாதவை அனைத்தும் நீங்கி விருப்பமானவை மட்டுமே உள்ளதால் விரும்பத்தக்கது என்றும் உணர்த்துவதற்காகவே விருப்பம் அல்லாதவை விலகுதல், விருப்பமானவை வந்து சேர்தல் ஆகிய இரண்டும் தனித்தனியே கூறப்பட்டன.