Srimad Rahasyatrayasaram - ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 27.மூலமந்த்ராதிகாரம் (பத்தி 112)
ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 27.மூலமந்த்ராதிகாரம்
விருப்பம் அல்லாதவற்றை நீக்கவேண்டும் என்னும் ப்ரார்த்தனை விருப்பமானவற்றை தானாகவே அளித்தாலும், அதனைத் தனியாக விண்ணப்பிப்பதன் காரணங்கள்
மூலம் – இப்படி அநிஷ்டநிவ்ருத்தியை ப்ரார்த்தித்தால், இஷ்ட ப்ராப்தியை அபேக்ஷிக்க வேணுமோ? ஸம்பத்யாவிர்பாவ: ஸ்வேநசப்தாத் என்றும், யதா ந க்ரியதே ஜ்யோத்ஸ்நா மலப்ரக்ஷாளநாந்மணே: தோஷ ப்ரஹாணாந் ந ஜ்ஞானம் ஆத்மன: க்ரியதே ததா யதோதபாந கரணாத் க்ரியதே ந ஜலாம்பரம் ஸதேவ நீயதே வ்யக்திம் அஸத: ஸம்பவ: குத: ததா ஹேயகுண த்வம்ஸாத் அவபோதாததயோ குணா: ப்ரகாச்யந்தே ந ஜன்யந்தே நித்யா ஏவாத்மனோ ஹி தே என்றும் சொல்லுகிறபடியே இஷ்ட ப்ராப்தி தானே வாராதோவென்னில், ஸ்வத: ஸ்வார்ஹம் யதா பாகம் புத்ர: பிதுரபேக்ஷதே ஸாபராதஸ்ததா தாஸ: கைங்கர்யம் பரமாத்மந: தன் அபராதத்தாலே ஸ்வத: ப்ராப்தத்தை இழந்து கிடக்கிற இவன் “என் கூறு நான் பெறவேணும், அதுக்காக என் அபராதத்தைப் பொறுத்தருளவேணும்” என்று அபேக்ஷிக்கையில் விரோதமில்லை. இத்தால் ப்ரதிபந்தக நிவ்ருத்தியில் மாணிக்கத்தி லொளியும், “இச்சாத ஏவ தவ விச்வபதார்த்த ஸத்தா” என்கிறபடியே நியதையான ஈச்வரேச்சையாலே பரம்புமாபோலே இங்கும் ஸ்வாபாவிகமான ஜ்ஞாவிகாஸாதிகள் ஸஹஜ காருண்ய ரூபையான ஈச்வரேச்சையாலே வருகிறனவென்னுமிடம் தோற்றுகிறது.
– இப்படியாக விருப்பம் அல்லாதவற்றை நீக்கிக் கொடுக்கவேண்டும் என்று ப்ரார்த்தனை செய்யும்போது, விருப்பமானவற்றை அளிக்கவேண்டும் என்று தனியாக மீண்டும் விண்ணப்பிக்கவேண்டுமோ? ப்ரஹ்மஸூத்ரம் (4-4-1) - ஸம்பத்யாவிர்பாவ: ஸ்வேநசப்தாத் – ப்ரஹ்மத்தை அடையும்போது ஜீவாத்மாவுக்கு அதுவரை மறைந்திருந்த குணங்கள் தானாகவே வெளிப்படுகின்றன. ஸ்ரீவிஷ்ணுதர்மம் (104 – 55, 56, 57) - யதா ந க்ரியதே ஜ்யோத்ஸ்நா மலப்ரக்ஷாள நாந்மணே: தோஷப்ரஹாணாந் ந ஜ்ஞாநமாத்மந: க்ரியதே ததா யதோதபாநகாணாத் க்ரியதே ந ஜலாம்பரம் ஸதேவ நீயதே வ்யக்திம் அஸத: ஸம்பவ: குத: ததா ஹேய குணத்வம்ஸாத் அவபோதாதயோ குணா: ப்ரகாச்யந்தே ந ஜ்ஞாயந்தே நித்யா ஏவ ஆத்மாநோ ஹி தே - வைரம் போன்ற கற்களில் உள்ள அழுக்கை நீக்குவதால் அதற்குப் புதிதாக ஒளி உண்டாவதில்லை; இது போன்றே சரீர தொடர்பு காரணமாக ஏற்பட்ட தோஷங்களை நீக்குவதால் ஆத்மாவிற்குப் புதிதாக ஞானம் உண்டாகுவதில்லை; குளம் கிணறு போன்றவற்றை வெட்டும்போது அங்கு புதிதாக நீர் உண்டாவதில்லை, மறைந்திருந்த நீர் மீண்டும் வெளிப்படுகிறது; இது போன்று தாழ்வான குணங்கள் அனைத்தும் மோக்ஷம் அடையும்போது நீங்கிய பின்னர், ஞானம் போன்ற இயல்பான தன்மைகள் ஆத்மாவிடம் வெளிப்படுகின்றன, அவை புதிதாக உண்டாவதில்லை, அவை ஆத்மாவிடம் எப்போதும் உள்ளவை அல்லவோ? மேலே உள்ள வரிகளின்படி, விருப்பமானவை தானாகவே வந்து சேரும் அல்லவோ (இந்தக் கேள்விக்கு விடை அருளிச்செய்கிறார்)? ஸ்வத: ஸ்வார்ஹம் யதா பாகம் புத்ர: பிதுரபேக்ஷதே ஸாபராதஸ்ததா தாஸ: கைங்கர்யம் பரமாத்மந: - தந்தையிடமிருந்து தனக்கு இயல்பாகவே கிட்ட உள்ள பாகத்தை ஒரு புத்திரன் எவ்விதம் வேண்டுகிறானோ அது போன்று அபராதங்கள் பல உள்ளவனாகிய ஒரு சேதநன், ஸர்வேச்வரனிடமிருந்து கைங்கர்யத்தை வேண்டுகிறான். தன்னுடைய குற்றங்கள் காரணமாக தனக்கு இயல்பாகவே கிட்டவல்ல கைங்கர்யங்கள் போன்றவற்றை இழந்து நிற்கும் சேதநன் ஸர்வேச்வரனிடம், “எனக்கான பங்கை நான் பெறவேண்டும். ஆகவே எனது அபராதங்களை நீ பொறுத்தருள வேண்டும்” என்று பிரார்த்தனை செய்வதில் எந்தவிதமான முரண்பாடும் இல்லை. இதன் மூலம் மேலே உள்ள விஷ்ணுதர்ம வரிகளில் கூறப்பட்ட “மாணிக்கத்தில் ஏற்படும் ஒளி”, ஸ்ரீவைகுண்டஸ்தவம் (36) - இச்சாத ஏவ தவ விச்வபதார்த்த ஸத்தா – உன்னுடைய ஸங்கல்பத்தாலேயே அனைத்து வஸ்துக்களுக்கும் இருப்பு உண்டாகிறது – என்னும் நிலை ஆகியவை அனைத்தையும் நியமிக்கும் ஸர்வேச்வரனுடைய இச்சை காரணமாகவே பரவி நிற்பது போன்று, இயல்பாகவே ஜீவாத்மாவுக்கு உரியதான ஞானமலர்ச்சி முதலானவை இயற்கையாகவே காருண்ய ரூபம் கொண்டதான ஸர்வேச்வரனுடைய இச்சையால் உண்டாகின்றன என்று தேறுகிறது.