Srimad Rahasyatrayasaram - ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 27.மூலமந்த்ராதிகாரம் (பத்தி 110)
ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 27.மூலமந்த்ராதிகாரம்
கைங்கர்யம் குறித்த கருத்து வேறுபாடு
மூலம் – இப்படி திருமந்த்ரத்தில் வாக்ய த்ரயத்திலே இரண்டு வாக்யம் ஸ்வரூப பரமாய் ஒரு வாக்யம் புருஷார்த்த ப்ரார்த்தனாபரமாக யோஜித்தது.
– ஆக இதுவரை திருமந்த்ரம் மூன்று வாக்கியமாக உள்ளது என்று கொள்ளப்பட்டி விளக்கம் அளிக்கப்பட்டது. இவ்விதம் கொள்ளும்போது முதல் இரண்டு வாக்கியங்கள் ஆத்ம ஸ்வரூபத்தைக் குறித்து உள்ளது என்றும், மூன்றாவது வாக்கியம் புருஷார்த்தத்தை அடைவதற்காகச் செய்யப்படும் ப்ரார்த்தனை என்றும் கூறப்பட்டது.