Srimad Rahasyatrayasaram - ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 27.மூலமந்த்ராதிகாரம் (பத்தி 108)

ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 27.மூலமந்த்ராதிகாரம்

கைங்கர்யம் குறித்த கருத்து வேறுபாடு

மூலம் – ப்ரணவத்திற் சொன்ன பகவச்சேஷத்வம் நமஸ்ஸிலே ஔசித்ய ரூபமான அத்யந்த பாரதந்த்ர்ய பாரார்த்யங்களடியாக யதாப்ரமாணம் ததீய பர்யந்தமாய் நிற்கையாலே “நாராயணாய” என்கிறவிடத்தில் அபேக்ஷிக்கிற பகவத் கைங்கர்யமும் ததீய பர்யந்தம். மம மத்பக்த பக்தேஷு ப்ரீதிரப்யதிகா பவேத் தஸ்மான் மத்பக்த பக்தாச்ச பூஜதீயா விசேஷத: தஸ்மாத் விஷ்ணு ப்ரஸாதாய வைஷ்ணவான் பரிதோஷயேத் ப்ரஸாதஸுமுகோ விஷ்ணு: தேநைவ ஸ்யாந்ந ஸம்சய: இத்யாதிகளிலும் இவ்வர்த்தம் ஸித்தம்.

– ப்ரணவத்தில் கூறப்படுவதான பகவானுக்கு அடிமையாக உள்ள நிலை என்பது, அவனுடைய அடியார்களுக்கும் அடிமையாக இருத்தல் என்பதைப் பல ப்ரமாணங்களால் உணரலாம். ஆகவே திருமந்த்ரத்தில் “நாராயணாய” என்னும் பதம் மூலம் விண்ணப்பிக்கப்படுவதான பகவத் கைங்கர்யம் என்பது பாகவத கைங்கர்யத்தையும் உள்ளடக்கியது என்றாகிறது. இதனைக் கீழே உள்ள வரிகள் உணர்த்துகின்றன: மஹாபாரதம் ஆச்வமேதிகபர்வம் (116-23) - மம மத்பக்த பக்தேஷு ப்ரீதிரப்யதிகா பவேத் தஸ்மான் மத்பக்த பக்தாச்ச பூஜதீயா விசேஷத: - என்னுடைய அடியார்களிடம் பக்தியாக உள்ளவர்கள் மீது எனக்கு ப்ரீதி அதிகமாக உள்ளது. ஆகவே எனது அடியார்களை நன்றாக பூஜிக்கவேண்டும். இதிஹாஸ ஸமுச்சயம் (25-2) - தஸ்மாத் விஷ்ணு ப்ரஸாதாய வைஷ்ணவான் பரிதோஷயேத் ப்ரஸாதஸுமுகோ விஷ்ணு: தேநைவ ஸ்யாந்ந ஸம்சய: - ஆகவே விஷ்ணுவின் க்ருபையைப் பெறுவதற்கு அவனுடைய அடியார்களை மகிழ வைக்கவேண்டும். அதனால் விஷ்ணு க்ருபை செய்யத் தொடங்குவான் என்பதில் நியம் இல்லை.