Srimad Rahasyatrayasaram - ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 27.மூலமந்த்ராதிகாரம் (பத்தி 105)
ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 27.மூலமந்த்ராதிகாரம்
மூலம் – தாதர்த்யம் நித்யஸித்தமாகையாலே ஆசாஸிக்க வேண்டாமையாலும் இஸ் ஸம்பந்த ஸ்வரூபம் ப்ரணவத்திலே சொல்லுகையாலும் இதின் பலமாய் ஸமுத்ரே கோஷ்பதமஸ்தி என்னுமாபோலே புருஷார்த்தாந்தரங்களையெல்லாம் விளாக்குலைக் கொண்டிருக்கிற பரிபூர்ண ப்ரஹ்மாநுபவ பரீவாஹரூபமான கைங்கர்யம் ஒழிவில் காலத்திற்படியே இங்கு அபேக்ஷிக்கப்படுகிறது. அத்ர ஸ்வலாபாபேக்ஷாபி ஸ்வாமி லாபாவஸாயிநீ ஸ்வாமி ப்ரயோஜநோபேக்ஷாப்யத: ஸ்வாநந்த ஹேதுகா உன்னை உகப்பிக்கும் கைங்கர்யத்தை நான் பெறவேணுமென்னாலும், என்னை அடிமை கொண்டு நீ உகக்க வேணுமென்னாலும் இருவர்க்கும் ப்ரயோஜநம் ஸித்தம்.
– “அவனுக்காகவே இருத்தல் (வாழ்தல்)” என்னும் நிலை எப்போதுமே ஜீவாத்மாவுக்கு உள்ளதாகும். அந்த நிலையை ப்ராத்திர்த்து அடையவேண்டிய அவசியம் இல்லை. மேலும், அவனுடனான இத்தகைய ஸம்பந்தத்தின் தன்மை குறித்து ப்ரணவத்தில் கூறப்படுகிறது. ஆகவே இத்தகைய நிலையின் பலனாக உள்ளதும், “ஒரு ஸமுத்திரத்தில் சிறிய ஒரு நீர் நிலையும் அடக்கம் ஆகும்” என்பதற்கு ஏற்ப அனைத்து புருஷார்த்தங்களையும் தன்னுள்ளே அடக்கிக் கொண்டிருப்பதும் ஆகிய பரிபூர்ணமான பகவத் அனுபவம் என்னும் கைங்கர்யமே ஸர்வேச்வரனிடம் ப்ராத்திக்கப்படுகிறது. அத்ர ஸ்வலாபாபேக்ஷாபி ஸ்வாமி லாபாவஸாயிநீ ஸ்வாமி ப்ரயோஜநோபேக்ஷாப்யத: ஸ்வாநந்த ஹேதுகா – “நாராயணாய” என்னும் பதத்தில் உள்ள நான்காம் வேற்றுமை மூலமாக ஜீவாத்மா தன்னுடைய புருஷார்த்தத்தை ப்ரார்த்தித்தாலும், எஜமானனாகிய ஸர்வேச்வரன் ஆனந்தம் கொள்ளுதல் என்பதான அவனுடைய ப்ரயோஜனத்திலேயே சென்று முடிகிறது; இது போன்று பகவானாகிய அவன் ஆனந்தம் கொள்ளவேண்டும் என்று அவனுடைய பலனை எண்ணுதல் என்பதும் அடிமை – எஜமானன் என்னும் உறவுமுறை காரணமாக ஜீவனின் ஆனந்தத்திலே முடிகிறது. எஜமானனாகிய உன்னை மகிழ்விக்கும்படியான கைங்கர்யத்தை நான் அடைந்தாலும், எனது அடிமைத்தனத்தால் நீ மகிழ்ந்தாலும் நாம் இருவருக்குமே ப்ரயோஜனம் உள்ளது.