Srimad Rahasyatrayasaram - ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 27.மூலமந்த்ராதிகாரம் (பத்தி 104)

ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 27.மூலமந்த்ராதிகாரம்

அகாரார்த்தாயைவ ஸ்வமஹமத மஹ்யம் ந நிவஹா: நராணாம் நித்யாநாமயநமிதி நாராயண பதம் யமாஹாஸ்மை காலம் ஸகலமபி ஸர்வத்ர ஸகலா ஸ்வவஸ்தா ஸ்வாவிஸ்ஸ்யுர்மம ஸஹஜ கைங்கர்ய விதய:

– “அ” என்பதன் பொருளாக உள்ள நாராயணனுக்கே நான் அடிமை, நான் எனக்காக இருக்கவில்லை. “நாராயணன்” என்னும் பதம் மூலம் “எப்போதும் உள்ளவர்களான ஜீவாத்மாக்கள் அவனுக்கு இருப்பிடம்” என்று யாரைக் கூறுகிறதோ, அந்த நாராயணன் பொருட்டு, எனக்கு இயல்பாகவே உண்டான கைங்கர்யங்களின் நிலைகள் அனைத்தும் எப்போதும், எங்கும், அனைத்து நிலைகளிலும் உண்டாகவேண்டும் – என்பதாகும். இதன் மூலம் “ஓம், நம:” ஆகியவை ஆத்மஸ்வரூபத்தைத் தெளிவாகக் கூறுகின்றன என்று அறியலாம். மூன்றாவது பதமான “நாராயணாய” என்பது “ஆவேன்” என்னும் வினைச்சொல்லோடு சேர்ந்து ப்ரணவத்தின் மூலம் கூறப்பட்ட பகவானின் பொருட்டு, அடையப்படும் இலக்கை அடையவேண்டும் என்னும் ப்ரார்த்தனையைக் காட்டுகிறது (அதாவது – நான் நாராயணனுக்காக ஆவேன் – என்பது ப்ரார்த்தனை). இவ்விதம் கொள்ளும்போது அடையப்படும் இலக்கை அடையவிடாமல் தடுக்கும் தடைகளை நீக்கவேண்டும் என்னும் ப்ரார்த்தனை இங்கு மறைமுகமாகவே உள்ளது என்றாகிறது. த்வயம் மற்றும் இராமாயணம் அயோத்யாகாண்டம் (31-27) - பவாம்ஸ்து ஸஹ வைதேஹ்யா – நீ மலையின் தாழ்வரைகளில் சீதையுடன் இன்பமாகக் கழிக்கப்போகிறாய் – என்றுள்ள வரிகளில் கூறுவது போன்று கைங்கர்யத்தினை ஏற்பவன் பத்னியோடு உள்ளவன் என்பதால், இங்கு “லக்ஷ்மியுடன் சேர்ந்த நாராயணன் பொருட்டு நான் ஆகக்கடவேன்” என்பதே ப்ரார்த்தனை ஆகிறது. திருமந்த்ரத்தில் உள்ள “நாராயணயாய” என்பதுடன் சேரும் விதமாக ஒரு வினைச்சொல் வேண்டும் என்றால், “பவேயம் = ஆகக்கடவன்” என்பதை மறைமுகமாக இணைத்துக் கொள்ளவேண்டும். இப்படிப்பட்ட ப்ரார்த்தனையைக் கீழே உள்ள வரிகளில் காணலாம்: திருவாய்மொழி (3-3-1) – வழுவிலா அடிமை செய்யவேண்டும் – அனைத்து இடங்களிலும் அனைத்து நிலைகளிலும் கைங்கர்யம் செய்வேனாக பெரியதிருமொழி (1-9-2) - அடியேனை ஆட்கொண்டருளே ஸ்ரீரங்ககத்யம் (3) - நித்ய கிங்கரதாம் ப்ரார்த்தயே – ஸ்ரீரங்கநாதா! எப்போதும் உனக்குக் கைங்கர்யம் செய்யவேண்டும் என்று ப்ரார்த்திக்கிறேன் ஸ்ரீரங்ககத்யம் (1) - நித்ய கிங்கரோ பவாநி - – ஸ்ரீரங்கநாதா! எப்போதும் உனக்குக் கைங்கர்யம் செய்யவேண்டும்