Srimad Rahasyatrayasaram - ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 27.மூலமந்த்ராதிகாரம் (பத்தி 103)

ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 27.மூலமந்த்ராதிகாரம்

இரண்டு வாக்கியமாகக் கொண்ட மூன்று கருத்துக்கள்

மூலம் – (6) திருமந்த்ரம் மூன்று வாக்யமானபோது ஸ்வரூபமும் புருஷார்த்தமும் சொல்ல உபாயம் ஆர்த்தமாதல், ஸ்வரூபமும் உபாயமும் சொல்ல புருஷார்த்தம் ஆர்த்தமாதல், உபாயமும் புருஷார்த்தமும் சொல்ல ஸ்வரூபம் ஆர்த்தமாதல், ஸ்வரூப உபாய புருஷார்த்தங்கள் அடைவே சப்தங்களாதல் ஆகக்கடவது. எங்ஙனேயென்னில் – அகாரார்த்தாயைவ ஸ்வமஹமத மஹ்யம் ந நிவஹா: நராணாம் நித்யாநாமயநமிதி நாராயண பதம் யமாஹாஸ்மை காலம் ஸகலமபி ஸர்வத்ர ஸகலா ஸ்வவஸ்தா ஸ்வாவிஸ்ஸ்யுர்மம ஸஹஜ கைங்கர்ய விதய: என்கிறபடியே ப்ரணவமும் நமஸ்ஸும் ஸ்வரூபத்தை சோதிக்கிறன. மூன்றாம் பதம் ப்ரணவத்திற் சொன்ன தாதர்த்யத்தைப் புரஸ்கரித்துக் கொண்டு அத்யாஹ்ருதமான க்ரியா பதத்தோடே கூடிப் புருஷார்த்த ப்ரார்த்தநார்த்தம். அப்போது அநிஷ்ட நிவ்ருத்தி ப்ரார்த்தனை அர்த்த ஸ்வபாவத்தாலே வரக்கடவது. த்வயத்திலும், “பவாம்ஸ்து ஸஹ வைதேஹ்யா” இத்யாதிகளிலும் சொல்லுகிறபடியே கைங்கர்ய ப்ரதிஸம்பந்தியும் ஸபத்நீகனானபடியாலே இங்கும் ஸலக்ஷ்மீகனான நாராயணன் பொருட்டாவேன் என்றபடி. நாராயணாய என்கிற இதுக்குக் க்ரியாபேக்ஷை உண்டாகையால் ஔசித்யத்தாலே பவேயம் என்றொரு பதம் அத்யாஹார்யம். “வழுவிலா அடிமை செய்ய வேண்டு” மென்றும், “அடியேனை ஆட்கொண்டருளே” யென்றும், “நித்ய கிங்கரதாம் ப்ரார்த்தயே” என்றும், “நித்ய கிங்கரோ பவாநி” என்றும் இப் ப்ரார்த்தனையைப் ப்ரயோகித்தார்களிறே.

– திருமந்த்ரம் என்பது மூன்று வாக்கியங்கள் கொண்டது என்று கொள்ளும்போது, பலவிதமான கருத்துகள் கிட்டுகின்றன. அவையாவன - திருமந்த்ரத்தில் உள்ள பதங்கள் ஆத்மஸ்வரூபத்தையும் புருஷார்த்தத்தையும் நேரடியாகக் கூறுகின்றன, உபாயம் என்பது மறைமுகமாகக் கூறப்படுகிறது – இது (6) மற்றும் (7) என்பதில் விளக்கப்படுகிறது. திருமந்த்ரத்தில் உள்ள பதங்கள் ஆத்மஸ்வரூபத்தையும் உபாயத்தையும் நேரடியாகக் கூறுகின்றன, புருஷார்த்தம் என்பது மறைமுகமாகக் கூறப்படுகிறது – இது (8) என்பதில் விளக்கப்படுகிறது. திருமந்த்ரத்தில் உள்ள பதங்கள் உபாயத்தையும் புருஷார்த்தத்தையும் நேரடியாகக் கூறுகின்றன, ஆத்மஸ்வரூப என்பது மறைமுகமாகக் கூறப்படுகிறது – இது (9) என்பதில் விளக்கப்படுகிறது. திருமந்த்ரத்தில் உள்ள பதங்கள் ஆத்மஸ்வரூபம், உபாயம், புருஷார்த்தம் ஆகியவற்றை “ஓம், நம:, நாராயண” என்னும் பதங்கள் முறையே நேரடியாகக் கூறுகின்றன – இது (10) என்பதில் விளக்கப்படுகிறது. இது எப்படி என்று கேட்கலாம். அஷ்டச்லோகி (3) :