Srimad Rahasyatrayasaram - ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 27.மூலமந்த்ராதிகாரம் (பத்தி 96)
ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 27.மூலமந்த்ராதிகாரம்
திருமந்த்ரத்தின் ஆழ்பொருளை விளக்கவல்ல பத்துவிதமான கருத்துக்கள்
மூலம் – இத்திருமந்த்ரத்தில் வாக்யமும் வாக்யார்த்தமும் இருக்கும்படி எங்ஙனேயென்னில், இத்தை ஏகவாக்யமென்றும், வாக்யத்வயமென்றும், வாக்யத்ரமென்றும் அவ்வோ ஸம்ப்ரதாயங்களாலே அநுஸந்திப்பார்கள். இப்படி வாக்யார்த்தத்தையும் பஹுப்ரகாரமாக வகுத்து அநுஸந்தானம் பண்ணுவார்கள்.
– இந்தத் திருமந்த்ரமானது ஒரு வரி அல்லது பல வரிகள் கொண்டுள்ளவிதம் மற்றும் அதற்கான பொருள்கள் எவ்விதம் உள்ளன என்று காண்போம். திருமந்த்ரத்தை ஒரு வாக்கியம் என்றூம், இரண்டு வாக்கியம் என்றும், மூன்று வாக்கியம் என்றும் அந்தந்த ஸம்ப்ரதாயங்களில் முன்னோர்கள் காண்பித்துள்ளனர். இதே போன்று அந்தந்த வாக்கியங்களின் பொருளையும் பலவிதமாகக் காண்பித்துள்ளனர்.