Srimad Rahasyatrayasaram - ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 27.மூலமந்த்ராதிகாரம் (பத்தி 95)
ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 27.மூலமந்த்ராதிகாரம்
இஹ நிஜபக்ஷ விருத்தௌ: ஈத்ருசநிஷ்டா விரோதிபிச்சாந்யௌ: த்விசதுஷ்க ஸாரவேதீ கங்காஹ்ருத: இவ ந கச்சதி க்ஷோபம்
– இந்த இரு நான்கு எழுத்தின் (எட்டு எழுத்து = அஷ்டாக்ஷரம் = திருமந்த்ரம்) ஆழ்பொருளை அறிந்த ஒருவன், தன்னுடைய ஸித்தாந்தத்துக்கு முரணாக உள்ள ஸித்தாந்தங்களாலும், தன்னுடைய நிஷ்டைக்கு முரணாக உள்ளவற்றாலும், கங்கையில் காணப்படும் மடு போன்று கலக்கம் அடையமாட்டான்.