Srimad Rahasyatrayasaram - ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 27.மூலமந்த்ராதிகாரம் (பத்தி 92)

ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 27.மூலமந்த்ராதிகாரம்

திருமந்த்ரத்தில் காணப்படும் மூன்று பதங்களால் உணரப்பட வேண்டிய மூன்று முக்கியமான அம்சங்கள்

பத த்ரயோ அத்ர ஸம்க்ஷேபாத் பாவ்யா அநந்யார்ஹ சேஷதா அநந்யோபாயதா ஸ்வஸ்ய ததா அநந்யபுமர்த்ததா

– திருமந்த்ரத்தில் உள்ள மூன்று பதங்களிலும் சுருக்கமாக உணரப்பட வேண்டியவை என்னவென்றால்: தனக்கு ஸர்வேச்வரன் அல்லாமல் வேறு யாரும் எஜமானனாக இல்லாத நிலை, வேறு எதனையும் உபாயமாகக் கைக்கொள்ளாத நிலை மற்றும் வேறு எந்தவிதமான புருஷார்த்தத்தையும் விரும்பாத நிலை ஆகும்.