Srimad Rahasyatrayasaram - ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 27.மூலமந்த்ராதிகாரம் (பத்தி 90)
ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 27.மூலமந்த்ராதிகாரம்
திருமந்த்ரத்தில் உணரவேண்டிய ஜீவாத்ம ஸ்வருபத்தினுடைய தன்மைகள்
மூலம் – நிரதிசய ஆனந்த யோக்யத்வம், பராபேக்ஷ கர்த்ருத்வம், ஸோபாதிக ஸ்வாமித்வம், பாகவத சேஷித்வம், பாகவத கிங்கரத்வம், அநந்யோபாயத்வம், அவித்யாதிமத்த்வம், கரணாதிஸாபேக்ஷ ஜ்ஞாந விகாஸவத்த்வம், ஸம்ஸார பயாக்ராந்தத்வம், அவித்யாதி நிவ்ருத்தி ஸாபேக்ஷத்வம், அகிஞ்சநத்வம், ஈச்வர ஸௌஹார்த்தாதிமத்த்வம், ஸதாசார்ய ப்ராப்திமத்த்வம், ஸாத்யோபாய அநுஷ்டான அர்ஹத்வம், உபாயநிஷ்டத்வம், மஹாப்ரபாவத்வம், விசிஷ்ட வேஷத்தாலே ஸ்ருஷ்டி ஸம்ஹார விஷயத்வம், அக்ஷயத்வம், ஸ்வதோ பஹுத்வம், அஸங்க்யாதத்வம், ஈச்வர வ்யாப்யத்வம், ஈச்வர நியாம்யத்வம், ஈச்வ்ர தார்யத்வம்,
– எல்லையற்ற ஆனந்தம் பெறக்கூடிய தகுதி உள்ளவன், ஸர்வேச்வரனுடைய விருப்பத்துக்கு இணங்க செயல் புரிபவன், ஒரு சில கட்டங்களில் ஒரு சிலவற்றுக்கு எஜமானன், அடியார்களுக்கு அடிமையாக உள்ளவன், அவர்களுக்குத் தொண்டு செய்பவன், ஸர்வேச்வரன் அல்லாது வேறு உபாயம் இல்லாதவன், அவித்யை முதலியவற்றால் பீடிக்கப்படுபவன், தன்னுடைய உடல் உறுப்புகள் மூலம் ஞானம் மலரும்படியாக உள்ளவன், ஸம்ஸார பயம் என்னும் முடிச்சுகளால் கட்டப்படுபவன், தன்னுடைய அவித்யை முதலானவை அகலும் வழி பார்த்து உள்ளவன், ஸர்வேச்வரன் தன்னைக் காக்க தன்னிடம் முதல் ஏதும் இல்லாதவன், ஸர்வேச்வரனுடைய நட்பு போன்ற பல நன்மைகளைக் கொண்டவன், நல்ல ஆசார்யனை அடைய முயல்பவன், பக்தி அல்லது ப்ரபத்தி என்பதான ஸாத்யோபாயங்களைக் கைக்கொள்ளும் தகுதி கொண்டவன், தான் பற்றியுள்ள உபாயத்தில் உறுதியாக உள்ளவன், உயர்ந்த ப்ரபாவங்கள் கொண்டவன், சரீரம் முதலானவற்றுடன் கூடியுள்ளதால் ஸ்ருஷ்டி, ஸம்ஹாரம் போன்றவற்றுக்கு இலக்காக உள்ளவன், எந்தவிதத்திலும் தேயாதவன் (அழியாதவன்), தன்னைப் போன்று பலரையும் கொண்டவன் (பல ஆத்மாக்கள் உண்டு), எண்ணற்றவர்களில் ஒருவன், ஸர்வேச்வரனால் வ்யாபிக்கப்பட்டவன், ஸர்வேச்வரனால் நியமிக்கப்படுபவன், ஸர்வேச்வரனால் தாங்கப்படுபவன்.