Srimad Rahasyatrayasaram - ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 27.மூலமந்த்ராதிகாரம் (பத்தி 89)
ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 27.மூலமந்த்ராதிகாரம்
திருமந்த்ரத்தில் உணரவேண்டிய ஜீவாத்ம ஸ்வருபத்தினுடைய தன்மைகள்
மூலம் – இப்படி ப்ராப்யனான பரமாத்மாவை ப்ராபிக்கும் ஜீவாத்மா இத்திருமந்த்ரத்தாலே அநுஸந்தேயனாம்போது ஸ்ரீமத்ரக்ஷ்யத்வம், அநந்ய ரக்ஷ்யத்வம், ஸர்வத்ர ஸர்வதா ஸர்வப்ரகார ரக்ஷகவத்த்வம், ஸுசீல ரக்ஷகவத்த்வம், புருஷகாரவத்த்வம், மஹாவிச்வாஸ யோகித்த்வம், ஸலக்ஷ்மீகதாஸத்வம், நித்ய தாஸத்வம், நிரூபாதிக தாஸத்வம், அநந்யார்ஹ தாஸத்வம், ஜ்ஞாநத்வம், ஆனந்தத்வம், ஸ்வயம் ப்ரகாசத்வம், ஸ்வஸ்மை பாஸமாநத்வம், அஹம் சப்த வாச்யத்வம், அணுபரிமாணத்வம், ஸூக்ஷ்மத்வம், சோதநாத்யநர்ஹத்வம், சதுர்விசதித்த்வ விலக்ஷணத்வம், அமலத்வம், ஈச்வராதந்யத்வம், ஜ்ஞாத்ருத்வம், ஆநுகூல்யாதி யோக்யத்வம், பரமபுருஷார்த்த அபேக்ஷார்ஹத்வம், நியோக யோக்யத்வம், கைங்கர்ய யோக்யத்வம், ஸர்வஸாக்ஷாத்கார யோக்யத்வம்
– இவ்விதம் அடையப்படவேண்டியவனாகிய பரமாத்மாவை அடைய முயலும் ஜீவாத்மா, இந்தத் திருமந்த்ரம் மூலம் எண்ணப்படும்போது அவனுக்கு உள்ள தன்மைகளாவன – மஹாலக்ஷ்மியுடன் சேர்ந்துள்ள ஸர்வேச்வரனால் காக்கப்படுபவன், மற்ற யாராலும் காக்கப்பட இயலாதவன், எப்போதும் எங்கும் அனைத்துவிதங்களிலும் காக்கப்படுபவன், மிக உயர்ந்த குணங்கள் கொண்டவனால் காக்கப்படுபவன், மஹாலக்ஷ்மியால் சிபாரிசு செய்யப்படுபவன், மஹாவிச்வாஸம் என்னும் யோகம் உள்ளவன், மஹாலக்ஷ்மியுடன் கூடிய ஸர்வேச்வரனுக்கு எப்போதும் தாஸனாக உள்ளவன், எப்போதும் அவர்களுக்குத் தாஸனாக உள்ளவன், எந்தவிதமான காரணமும் இன்றி இயல்பாகவே அவர்களுக்குத் தாஸனாக உள்ளவன், மற்ற யாருக்கும் தாஸன் அல்லன், ஞானமயமானவன், ஆனந்தமயமானவன், தானாகவே ப்ரகாசிப்பவன், தனக்குத்தானே தன்னை வெளிப்படுத்திக் கொள்பவன், “நான்” என்பதால் குறிக்கப்படுபவன் (ஆத்மா), அணு அளவே உள்ளவன், மிகவும் நுண்ணியமானவன், அறுக்கவோ எரிக்கவோ இயலாதவன், இருபத்து நான்கு தத்துவங்களைக் காட்டிலும் வேறுபட்டவன், தோஷங்கள் அற்றவன், ஈச்வரனைக் காட்டிலும் வேறுபட்டவன், எப்போதும் அறியும் தன்மை கொண்டவன், அனுபவிக்கத் தகுந்த அனைத்தையும் அனுபவிக்கும் தகுதி கொண்டவன், மிகவும் உயர்ந்த புருஷார்த்தமாகிய மோக்ஷத்தை விரும்பும் தகுதி உள்ளவன், ஸர்வேச்வரனால் கைக்கொள்ளப்படத் தகுந்தவன், பகவானுக்கு அனைத்துவிதமான கைங்கர்யங்களையும் செய்யத் தகுதி உள்ளவன், அனைத்தையும் நேரடியாகக் காணும் திறன் கொண்டவன்.