Srimad Rahasyatrayasaram - ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 27.மூலமந்த்ராதிகாரம் (பத்தி 86)

ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 27.மூலமந்த்ராதிகாரம்

திருமந்த்ரத்தில் சிந்திக்கவல்ல (த்யானிக்கத்தக்க) பகவத் குணங்கள்

மூலம் – ஸர்வவேதாந்த ப்ரதாந ப்ரதிபாத்யத்வம், ஸர்வேபாதநத்வம், ஸர்வநிமித்தத்வம், ஸத்யஸங்கல்பத்வம், ஸர்வ சரீரத்வம், ஸர்வ சப்த வாச்யத்வம், ஸர்வ கர்ம ஸமாராத்யத்வம், ஸர்வ பல ப்ரதத்வம், ஸர்வவித பந்துத்வம், ஸர்வ வ்யாபகத்வம், நிரதிசய ஸூக்ஷ்மத்வம், ஸர்வ தாரத்வம், ஸ்வநிஷ்டத்வம், ஸத்யத்வம், ஜ்ஞாநத்வம், அநந்தத்வம், ஆனந்தத்வம், அமலத்வம், நிரூபித ஸ்வரூப விசேஷண அநுக்தாநந்த குணவத்த்வம், நித்ய திவ்யமங்கள விக்ரஹத்த்வம், பரவ்யூஹாத்யவஸ்தாவத்த்வம், ஸத்யாவதாரத்வம், அஜஹத்ஸ்வ ஸ்வபாவத்வம், அப்ராக்ருதாவதாரத்வம், அகர்மவச்ய அவதாரத்வம், அகாலநியாமாவதாரத்வம், ஆச்ரிதார்த்த குணபரீவாஹ அவதாரத்வம், ஸர்வாவஸ்த சுபாச்ரயத்வம், ஸர்வாவஸ்த லக்ஷ்மீஸஹசரத்வம், திவ்ய பூஷணாயுத மஹிஷீ ஸ்தாந பரிஜன பரிச்சத த்வாரபால பார்ஷதாதிமத்த்வம்,

– அனைத்து வேதாந்தங்களிலும் முதன்மையானவனாகக் கூறப்படுதல், அனைத்துவிதமான உபாதானக் காரணமாக இருத்தல், அனைத்துவிதமான நிமித்த காரணமாக இருத்தல், தவறாத ஸங்கல்பத்துடன் இருத்தல், அனைத்தையும் சரீரமாகக் கொண்டிருத்தல், அனைத்து சொற்களாலும் கூறப்படுதல், அனைத்து கர்மங்களையும் தனது ஆராதனையாகவே கொண்டிருத்தல், அனைத்து கர்மங்களுக்கான அனைத்து பலன்களையும் அளித்தல், அனைவருக்கும் அனைத்துவிதமான உறவினனாக இருத்தல், எங்கும் நீக்கமற பரவி இருத்தல், மிகவும் ஸூக்ஷ்மமாக இருத்தல், அனைத்தையும் தாங்கியபடி இருத்தல், தனக்குத்தானே ஆதாரமாக இருத்தல், ஸத்யத்துடன் இருத்தல், ஞானமயமாக இருத்தல், அனைத்திலும் எல்லையற்றபடி இருத்தல், ஆனந்தமயமாக இருத்தல், எந்தவிதமான தோஷமும் இல்லாமல் இருத்தல், தன்னுடைய எல்லயற்ற ஸ்வரூபங்கள் அனைத்தும் ஸத்யம் உள்ளிட்ட பலவற்றால் வெளிப்படும்படி இருத்தல், எப்போதும் மங்களகரமான திருமேனியுடன் இருத்தல், பர வ்யூஹம் முதலான நிலைகளுடன் இருத்தல், ஸத்யம் முதலானவற்றை வெளிப்படுத்தும் அவதாரங்களுடன் இருத்தல், தன்னுடைய ஸ்வபாவங்களுடன் கூடியபடியே அவதாரங்களுடன் இருத்தல், இந்தப் பூமியின் தொடர்புடைய எந்தவொரு வஸ்துவின் ஸம்பந்தமும் இல்லாதபடியான அவதாரங்களுடன் இருத்தல், கர்மங்கள் காரணமாக உண்டான சரீரம் என்று இல்லாதபடியான சரீரத்துடன் கூடிய அவதாரங்களுடன் இருத்தல், இந்த நேரத்தில் இந்த அவதாரத்தில் வரவேண்டும் என்று காலநியமனம் இல்லாத அவதாரங்களுடன் இருத்தல், தன்னுடைய அடியார்களுடைய குறைகளை நீக்கவல்ல கல்யாணகுணங்கள் நிரம்பிய அவதாரங்களுடன் இருத்தல், எந்த நிலையிலும் தூய்மை மற்றும் அண்டக்கூடிய தன்மை ஆகியவற்றுடன் இருத்தல், எந்த நிலையிலும் மஹாலக்ஷ்மியுடன் கூடி இருத்தல், திவ்யமான ஆபரணங்கள் - ஆயுதங்கள் – பட்டமஹிஷிகள் – இருப்பிடம் – வேலையாட்கள் – ஆசனங்கள் – வாயில் காப்பாளர்கள் போன்ற பலவற்றுடன் கூடியபடி இருத்தல்.