Srimad Rahasyatrayasaram - ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 27.மூலமந்த்ராதிகாரம் (பத்தி 85)

ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 27.மூலமந்த்ராதிகாரம்

திருமந்த்ரத்தில் சிந்திக்கவல்ல (த்யானிக்கத்தக்க) பகவத் குணங்கள்

மூலம் – ஸ்வத: கர்த்ருத்வம், சக்த்யாதாயகத்வம், ப்ரேரகத்வம், அநந்யப்ரேர்யத்வம், அநுமந்த்ருத்வம், கர்மஸாக்ஷித்வம், ஸஹகாரித்வம், ப்ரியப்ரவர்த்தகத்வம், ஹிதப்ரவர்த்தகத்வம், நிருபாதிக நந்தவ்யத்வம், வசீகார்யத்வம், ஸித்தோபாயத்வம், ஸாத்யோபாய ஹேதுத்வம், ச்ருதி ஸ்ம்ருதி ரூபாஜ்ஞாவத்வம், தண்டதரத்வம், ஸர்வஸமத்வம், ஆச்ரித பக்ஷபாதித்வம், அவித்யாதி ஹேதுத்வம், அவித்யாத்யநர்ஹத்வம், ஆச்ரித அவித்யா நிவர்த்தகத்வம், ஸ்வரூபாந்யதாபாவ ராஹித்யம், ஸ்வபாவாந்யதாபாவ ராஹித்யம், ஸர்வநேந்த்ருத்வம், ஸர்வ ஜகத் வ்யாபார லீலத்வம்

– அனைத்தையும் யாருடைய உதவியும் இன்றித் தானாகவே செய்யவல்ல தன்மை, அறியும் தன்மை முதலானவற்றால் ஜீவாத்மாக்களை கவரும் தன்மை, அனைத்து செயல்களையும் தூண்டவல்ல தன்மை, மற்ற யாராலும் தூண்டப்படவேண்டிய அவசியம் இல்லாத தன்மை, அனைத்து கர்மங்களையும் செய்ய அனுமதி அளிக்கும் தன்மை, அனைத்து கர்மங்களுக்கும் ஒரே சாட்சியாக உள்ள தன்மை, கர்மங்களுக்கு உதவியாக உள்ள தன்மை, அவனுக்கு விருப்பமானவற்றைச் செய்பவர்களை ஊக்குவிக்கும் தன்மை, அவனுடைய அடியார்கள் தங்களுக்கு நன்மையானவற்றைச் செய்யும்படியாகத் தூண்டும் தன்மை, எந்தவிதமான காரணமும் அவசியம் இல்லாமல் உபாசிக்கப்படும் வஸ்துவாக இருத்தல், மற்றவர்களால் ஏவப்பட்டுத் தங்களுடைய செயல்களை முடித்துக் கொள்ளும்படியாக உள்ள தன்மை, எப்போதும் ஜீவாத்மாவுக்கு உதவக் கூடிய நிலையில் உள்ள தன்மை, பக்தி அல்லது ப்ரபத்தியை ஜீவாத்மா கைக்கொள்ளக் காரணமாக உள்ள தன்மை, ச்ருதி மற்றும் ஸ்ம்ருதி ரூபங்களில் தன்னுடைய ஆணைகளை வெளிப்படுத்திய தன்மை, தவறு செய்பவர்களைத் தண்டிக்கும் தன்மை, அனைவரையும் ஒரே போன்று ஆதரிப்பவன், தன்னை அண்டி நிற்பவர்களிடம் அதிகமான கருணையை வெளிப்படுத்தும் தன்மை, அவித்யை முதலானவை உண்டாகக் காரணமாக உள்ள தன்மை, அவித்யை மற்றும் கர்மங்கள் அற்ற தன்மை, தன்னுடைய அடியார்களுடைய அவித்யையை நீக்கும் தன்மை, தன்னுடைய ஸ்வரூபம் எப்போதும் மாறாதபடி உள்ள தன்மை, தன்னுடைய இயல்பான தன்மை எப்போதும் மாறாதபடி உள்ள தன்மை, அனைத்து ஜீவாத்மாக்களையும் ஆளும் தன்மை, உலகங்களைப் படைத்து காத்து ஸம்ஹாரம் செய்வதை ஒரு லீலையாகக் கொண்ட தன்மை.