Srimad Rahasyatrayasaram - ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 27.மூலமந்த்ராதிகாரம் (பத்தி 84)
ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 27.மூலமந்த்ராதிகாரம்
திருமந்த்ரத்தில் சிந்திக்கவல்ல (த்யானிக்கத்தக்க) பகவத் குணங்கள்
மூலம் – இதுக்குப் ப்ரதிபாத்ய தேவதையாய்ப் ப்ராப்யமுமான பரஸ்வரூபத்தை இத்திருமந்த்ரத்தில் சப்தங்களாயும் ஆர்த்தங்களாயுமுள்ள ப்ரகாரங்களோடேகூட யதா ப்ரமாணம் அநுஸந்திக்கும்போது ரக்ஷகத்வம், அதினுடைய ஸ்வபாவ ஸித்தத்வம், அதில் ஸர்வவிஷயத்வம், ரக்ஷ்யவஸ்து விசேஷாநுரூபமாக ரக்ஷையினுடைய நாநாப்ரகாரத்வம், ஸர்வதா ரக்ஷகத்வம், ஸர்வத்ர ரக்ஷகத்வம், ஸர்வப்ரகார ரக்ஷகத்வம், ஸ்வார்த்த ரக்ஷகத்வம், ஸர்வரக்ஷகத்வாபேக்ஷிதமான ஸர்வஜ்ஞத்வம், ஸர்வசக்தித்வம், ஸ்வேச்சா வ்யதிரிக்தாநிவார்யத்வம், அநதிக்ரமணீய ரக்ஷண ஸம்ரம்பத்வம், பரமகாருணிகத்வம், அவஸர ப்ரதீக்ஷத்வம், வ்யாஜமாத்ர ஸாபேக்ஷத்வம், ஆச்ரித ஸுலபத்வம், விச்வஸநீயத்வம், ஸாபராததடநாத்யநுகுண விசேஷணத்வம், சேஷித்வம், அதினுடைய நிருபாதிகத்வ நித்யத்வ ஸர்வவிஷயத்வங்கள், அநந்யசேஷித்வம், குணக்ருதசேஷித்வம், ஸபத்நீகசேஷித்வம், ஸமாப்யதிகாராஹித்யம், ஆத்மஹவிருத்தேசார்ஹத்வம், அசித் பத்த முக்த நித்ய விலக்ஷணத்வம், பரவிசேஷித்வ ஹேதுத்வம்
– திருமந்த்ரத்தில் கூறப்படும் தெய்வமாகிய நாராயணனுடைய ஸ்வரூபத்தை, திருமந்த்ரத்தின் ஆழ்ந்த பொருள் மற்றும் சப்தங்கள் ஆகியவற்றின் மூலம், தகுந்த ப்ரமாணங்களுடன் த்யானிக்கும்போது, அந்த ஸ்வரூபத்தில் கீழே கூறப்படும் பல தன்மைகள் வெளிப்படுகின்றன. அவையாவன – காப்பாற்றும் தன்மை, அவன் இயல்பாகவே காப்பாற்றும் தன்மையுடன் இருத்தல், அவ்விதம் காக்கும்போது அனைத்தையும் காத்தல், காப்பாற்றப்படும் வஸ்துக்கள் பல தன்மைகளுடன் உள்ளதால் காப்பாற்றும் தன்மைகளும் பலதாக இருத்தல், அனைத்துக் காலங்களிலும் காத்தல், அனைத்து இடங்களிலும் காத்தல், அனைத்துவிதங்களிலும் காத்தல், தன்னுடைய விருப்பம் காரணமாகவே காத்தல், அனைத்தையும் காப்பாற்றுவதற்கு அவசியமாக உள்ளதான அனைத்தையும் அறியும் தன்மை, அனைத்து சக்திகளும் கொண்டிருத்தல், தன்னுடைய விருப்பம் அல்லாமல் தன்னால் காப்பாற்றப்படுதல் என்பதை யாராலும் ஒதுக்க இயலாத தன்மை, அவன் காப்பாற்றுவதை யாராலும் தடுக்க இயலாத தன்மை, மிகுந்த கருணை நிறைந்த தன்மை, காப்பாற்றுவதற்கான தகுந்த தருணத்தை எதிர்பார்த்தபடி உள்ள தன்மை, ஜீவனைக் காப்பாற்ற அந்த ஜீவனிடமிருந்து ஒரு சிறிய அல்ப காரணத்தை மட்டுமே நோக்கியிருக்கும் தன்மை, தன்னை அழைப்பவர்களுக்கு மிகவும் எளியவனாக உள்ள தன்மை, எப்போதும் நம்பலாம் என்னும்படி உள்ள தன்மை, யார் எந்த ஒரு தவறு இழைத்தாலும் அதனைப் பொறுத்துக்கொள்ளும்படித் தன்னிடம் சிபாரிசு செய்யும் தன்மை (மஹாலக்ஷ்மி), அனைத்திற்கும் எஜமானனாக உள்ள தன்மை, எந்தவிதமான காரணமும் இல்லாமல் எப்போதும் அனைவருக்கும் எஜமானனாக உள்ள தன்மை, மற்ற யாருக்கும் இவன் அடிமையாக இல்லாத தன்மை, யார் தன்னுடைய குணங்களையும் தன்மைகளையும் அறிகிறார்களோ அவர்களுக்கு எஜமானனாக இருத்தல், தன்னுடைய பத்தினியாகிய பெரியபிராட்டியுடன் சேர்ந்து எஜமானனாக இருத்தல், தனக்கு நிகராகவோ அல்லது விஞ்சியோ யாரும் இல்லாத தன்மை, ஆத்மாவை அவிர்பாகமாக அளிப்பதற்கு அனைத்து தகுதியும் கொண்டிருத்தல், அசித் – ஸம்ஸாரி – முக்தி பெற்றவர் – நித்யஸூரிகள் ஆகிய அனைத்தைக் காட்டிலும் வேறுபட்டிருத்தல், அனைத்தும் இவன் அடிமையாக உள்ளதால் அனைத்திற்கும் காரணமாக உள்ள தன்மை.