Srimad Rahasyatrayasaram - ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 27.மூலமந்த்ராதிகாரம் (பத்தி 83)

ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 27.மூலமந்த்ராதிகாரம்

திருமந்த்ரம் பகவத்ஸ்வரூபம் மற்றும் ஜீவஸ்வரூபம் ஆகியவற்றைக் காட்டுதல்

மூலம் – இப்படி இப்பதங்களினுடைய வ்யாகரண நிருக்தாதி ஸித்த வ்யுத்பத்தி பராமர்சத்தாலே பரவாதி மூலமாக வரும் மாசற விளக்கப்பட்ட திருமந்த்ரமாகிற கண்ணாடி, பரஸ்வரூபாதிகளையும் ஸ்வஸ்வரூபத்திற் காணவரிய நிலங்களையுமெல்லாம் ஸுவ்யக்தமாகக் காட்டும்.

– இப்படியாக திருமந்த்ரத்தில் உள்ள பல எழுத்துக்களுடைய வ்யாகரணம், நிருக்தம், மந்த்ரசாஸ்த்ரம் ஆகியவற்றில் கூறப்பட்ட பொருள்களை ஆராய்வதன் மூலம் திருமந்த்ரம் என்பது மிகவும் தெளிவாக விளக்கப்பட்டது. இவ்விதம் கண்ணாடி போன்றுள்ள திருமந்த்ரம், அறிந்து கொள்வதற்குக் கடினமாக உள்ளதான பரமாத்மாவுடைய ஸ்வரூபம் மற்றும் ஜீவாத்மாவுடைய ஸ்வரூபம் ஆகிய இரண்டையும் முகவும் தெளிவாகக் காண்பிக்கிறது.