Srimad Rahasyatrayasaram - ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 27.மூலமந்த்ராதிகாரம் (பத்தி 82)
ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 27.மூலமந்த்ராதிகாரம்
அஷ்டாக்ஷரத்தில் உள்ள அக்ஷரத்துக்கான பூர்வாசார்யர்கள் அருளிச்செய்த பல பொருள்கள்
மூலம் – இத்திருமந்த்ரத்தில் நகாரம் முதலான ஏழு திருவக்ஷரங்களுக்கும் ப்ரத்யேகம் மந்த்ர ஸ்ம்ருதிகளிற் சொன்ன அர்த்தங்களை நாயகத்வம் ச ஸர்வேஷாம் நாமநத்வம் பரே பதே நாசகத்வம் விருத்வாநாம் நகாரார்த்த: ப்ரகீர்த்தித: மங்களத்வம் மஹத்த்வம் ச மஹநம் கரோதி யத் ஆச்ரிதாநாம் ததோ ஜ்ஞேயோ மகாரார்த்தஸ்ததோ புதை: நாஸ்திக்ய ஹாநிர் நித்யத்வம் நேத்ருத்வம் ச ஹரே: பதே நாகார ஸேவிநாம் ந்ருணாம் மந்த்ரவித்பி: ப்ரகீர்த்தித: ரஞ்ஜநம் பகவத்யாசு ராகஹாநிஸ்ததோ அந்யத: ராஷ்ட்ரத்ராணாதிகம் சாபி ப்ராப்யதே ரேபஸேவயா யோகோத்யோக: பலம் சாசு யகாராத் ப்ராப்யதே புதை: வர்ணநம் ச ததா விஷ்ணோ: வாணீஸித்திர்ணகாரத: யக்ஷ ராக்ஷஸ வேதாள பூதாதீநாம் பயாய ய: ஏவமக்ஷர நிர்வாஹோ மந்த்ரவித்பி: ப்ரகீர்த்தித: இத்யாதிகளாலே சில ஆசார்யர்கள் ஸங்க்ரஹித்தார்கள்.
– திருமந்த்ரத்தில் (ப்ரணவம் நீங்கலாக) உள்ள “ந” என்னும் எழுத்து தொடக்கமாக உள்ள ஏழு எழுத்துக்களுக்கும் மந்த்ர ஸ்ம்ருதிகளில் உள்ளது போன்று தனித்தனியாக நம்முடைய பூர்வாசார்யர்கள் கீழே உள்ளது போன்று அருளிச் செய்தார்கள்: நாயகத்வம் ச ஸர்வேஷாம் நாமநத்வம் பரே பதே நாசகத்வம் விருத்வாநாம் நகாரார்த்த: ப்ரகீர்த்தித: - அனைவருக்கும் க்ஷேமங்களை அளித்தல், பரமபதம் மீது பற்றுதல் உண்டாக்குதல், இதற்கு விரோதியாக உள்ளதான “ஆத்மாவுக்கு ஏற்காத குணங்கள்” என்பவற்றை அழித்தல் ஆகியவையே “ந” என்பதன் பொருளாகும் (“நமோ” என்பதில் உள்ள “ந”) மங்களத்வம் மஹத்த்வம் ச மஹநம் கரோதி யத் ஆச்ரிதாநாம் ததோ ஜ்ஞேயோ மகாரார்த்தஸ்ததோ புதை: - அடியார்களுக்கு மங்களத்தைச் செய்தல், அவர்களுடைய ஞானத்தை நன்றாக மலரும்படிச் செய்தல், அவர்களை மற்றவர்கள் வணங்கும்படிச் செய்தல் ஆகியவையே “ம” என்பதன் பொருளாகும் (“நமோ” என்பதில் உள்ள “ம”) நாஸ்திக்ய ஹாநிர் நித்யத்வம் நேத்ருத்வம் ச ஹரே: பதே நாகார ஸேவிநாம் ந்ருணாம் மந்த்ரவித்பி: ப்ரகீர்த்தித: - நாஸ்திகத் தன்மையை விலக்குதல், ஸர்வேச்வரனுக்கான கைங்கர்யத்தை எப்போதும் செய்தல், பரமபதம் கொண்டு சேர்க்கும்விதம் உள்ள ஆசார்ய தன்மை ஆகியவையே “நா” என்பதன் பொருளாகும் (“நாராயணாய” என்பதில் உள்ள “நா”) ரஞ்ஜநம் பகவத்யாசு ராகஹாநிஸ்ததோ அந்யத: ராஷ்ட்ரத்ராணாதிகம் சாபி ப்ராப்யதே ரேபஸேவயா – ஸர்வேவரனிடம் விரைவாக ப்ரீதி உண்டாதல், அவனைத் தவிர மற்றவர்களிடம் உள்ள ஈடுபாட்டினை விடுதல், ராஜ்யத்தைக் காத்தல் ஆகியவை “ரா” என்னும் எழுத்தைத் த்யானிப்பவர்க்குக் கிட்டும் (“நாராயணாய” என்பதில் உள்ள “ரா”) யோகோத்யோக: பலம் சாசு யகாராத் ப்ராப்யதே புதை: வர்ணநம் ச ததா விஷ்ணோ: வாணீஸித்திர்ணகாரத: - ஸர்வேச்வரனை அடைவதில் உள்ள வேகமும் அதன் பயனும் “ய” என்பதால் உண்டாகின்றன; ஸர்வேச்வரனைப் புகழ்வதும், அதற்கான வாக்கும் “ண” என்பதால் உண்டாகின்றன (“நாராயணாய” என்பதில் உள்ள “ய” மற்றும் “ண”) யக்ஷ ராக்ஷஸ வேதாள பூதாதீநாம் பயாய ய: ஏவமக்ஷர நிர்வாஹோ மந்த்ரவித்பி: ப்ரகீர்த்தித: - யக்ஷன், ராக்ஷஸன், வேதாளம், பூதம் ஆகியவை பயந்து ஓடுதல் என்பது “ய” என்பதால் உண்டாகிறது (“நாராயணாய” என்பதில் உள்ள “ய”). இவ்விதம் மந்த்ரத்தில் உள்ள எழுத்துக்களுடைய பொருள்கள் மற்றும் பயன்கள், மந்த்ரங்களை அறிந்தவர்களால் கூறப்படுகிறது.