Srimad Rahasyatrayasaram - ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 27.மூலமந்த்ராதிகாரம் (பத்தி 81)
ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 27.மூலமந்த்ராதிகாரம்
மூலம் – இந்நாராயண சப்தத்தில் சதுர்த்தியாலே மேல் சொல்லப்புகுகிற வாக்யார்த்தங்களுக்கு ஈடாகத் தாதர்த்யாதிகள் காட்டப்படுகின்றன. ஸ்தூலா நுஸந்தாநத்தில் இச்சதுர்த்தீ “நம:” சப்தயோகத்தாலும் கொள்ளலாம். அப்போது இச்சதுர்த்திக்கு ப்ரயோஜநாதிசயமில்லை. ஷஷ்டபஞ்சதசாத்வயர்ணாத் கேவல வ்யஞ்ஜநீக்ருதாத் உத்தரோ மந்த்ரசேஷஸ்து சக்திரித்யஸ்ய கத்யதே என்கையாலே இது திருமந்த்ரத்தில் பலஸித்தி ஹேதுவான ப்ரதேசம். யோஜநா விசேஷங்களில் பலப்ரார்த்தனையும் இவ்விடத்திலேயாகிறது. அர்த்தாத் ப்ரகரணால்லிங்காத் ஔசித்யாத்தேசகாலத: சப்தார்த்தா: ப்ரவிபஜ்யந்தே ந சப்தாதேவ கேவலாத் என்கிறபடியே ஒரு சப்தத்துக்கே ப்ரகரணாதிகளுக்கு ஈடாக அர்த்தபதம் கொள்ளுகை ஸர்வஸம்மதம். ஆகையாலே தீயமாநார்த்த சேஷித்வம் ஸம்ப்ரதாநத்வமிஷ்யதே இத்யாதிகளிற்படியே பர ஸ்வத்வ ஆபாதனம் இவ்விடத்தில் கூடாதாகிலும், ஈச்வரன் தனக்குச் சேஷமான வஸ்துவைத் தானே ரக்ஷித்துக் கொள்ளும்படி ஸமர்ப்பிக்கிற அளவைப் பற்ற இவ் வ்யாபக மந்த்ரங்களில் சதுர்த்தியை ஸம்ப்ரதாநார்த்தையாக அஹிர்புத்ந்யன் வ்யாக்யானம் பண்ணினான். நிசீபாவேந ஸந்த்யோத்யம் ஆத்மநோ யத் ஸமர்ப்பணம் விஷ்ண்வாதிஷு சதுர்த்தீ தத்ஸம்ப்ரதாந ப்ரதர்சிநீ நீசீபூதோ ஹ்யஸாவாத்மா யத் ஸம்ரக்ஷ்யதயா அர்ப்யதே தத் கஸ்மா இத்யபேக்ஷாயாம் விஷ்ணவே ஸ இதீர்யதே என்கிற வசநத்தில் “விஷ்ண்வாதிஷு” என்கையாலே நாராயணாதி சப்தங்களில் சதுர்த்தியும் வ்யாக்யானம் பண்ணப்பட்டது.
– அடுத்து “நாராயண” என்னும் பதத்தில் காணப்படும் நான்காம் வேற்றுமை ( “ஆய” – நாராயணனுக்காக) மூலம், இனி உரைக்கப்பட உள்ளதான பொருளுக்குச் சேரும் விதத்தில், அவனுக்காகவே ஜீவாத்மா இருக்கும் தன்மை முதலானவை கூறப்படுகின்றன. “நாராயணாய” என்பதை நேரடியாகப் பொருள் கொள்ளும்போது, நான்காம் வேற்றுமை பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதை “நம:” என்னும் பதம் மூலம் உணரலாம் (அதாவது – நம: = நான் எனக்கு உரியவன் அல்லன்; அப்படி என்றால் நான் யாருக்கு உரியவன்? நாராயணாய = நாரயணனுக்கு உரியவன்). இவ்விதம் கொள்ளும்போது இங்குள்ள நான்காம் வேற்றுமையானது இலக்கண விதிகளின்படி வரவேண்டும் அல்லாமல் வேறு வழி இல்லை. நாரதீயம் (1-59) - ஷஷ்டபஞ்சதசாத்வயர்ணாத் கேவல வ்யஞ்ஜநீக்ருதாத் உத்தரோ மந்த்ரசேஷஸ்து சக்திரித்யஸ்ய கத்யதே – திருமந்த்ரத்தில் உள்ள “ந” என்பதிலிருந்து எண்ணும்போது ஆறாவது எழுத்தாகவும், வடமொழியில் “ச” என்னும் எழுத்தைத் தொடர்ந்து பதினைந்தாவது எழுத்தாகவும் உள்ள “ண” (நாராயண என்பதில் உள்ள “ண”) என்னும் எழுத்துவரை உள்ள பகுதியை விட்டுவிட்டு, மீதம் உள்ள பகுதியானது (ஆய என்னும் பகுதி), திருமந்த்ரத்தின் சக்தி என்று கூறப்படுகிறது – என்பது போன்ற வரிகளில் உள்ளது போன்று, “ஆய” என்னும் நான்காம் வேற்றுமையே திருமந்த்ரத்தின் பலன் கிட்டுவதற்குக் காரணமான பகுதியாக உள்ளது. ஒரு சிலர் இந்தப் பகுதியில்தான், திருமந்த்ரத்தின் பலனைப் பெறுவதற்கான ப்ரார்த்தனை அடங்கி உள்ளது என்கிறார்கள். அர்த்தாத் ப்ரகரணால்லிங்காத் ஔசித்யாத்தேசகாலத: சப்தார்த்தா: ப்ரவிபஜ்யந்தே ந சப்தாதேவ கேவலாத் – பலன், ஸந்தர்ப்பம், அடையாளம், தகுதி, இடம், காலம் ஆகியவற்றுக்கு ஏற்றபடி சொற்களின் பொருள் மாறுபடும்; இவற்றை ஆராயாமல் சொற்களுக்குள்ள சப்தத்தை கொண்டு மட்டுமே பொருள் உரைத்தல் கூடாது – என்று கூறுவதற்கு ஏற்ப ஒரு சொல் அமைந்துள்ள இடத்திற்கு ஏற்றபடி அதற்குப் பொருள் உரைத்தல் என்பது அனைவராலும் ஏற்கப்படுவதாகும். ஆகவே, தீயமாநார்த்த சேஷித்வம் ஸம்ப்ரதாநத்வமிஷ்யதே – கொடுக்கின்ற வஸ்துவுக்கு ஏற்றபடியான பெற்றுக் கொள்பவனாக இருத்தல் ஸம்ப்ரதாநம் என்கிறது – போன்ற வரிகளுக்கு ஏற்ப, ஈச்வரனுக்கு உரிமை இல்லாத ஒரு பொருள் (ஜீவாத்மா) அவனுக்கு வழங்கப்படவில்லை; ஜீவாத்மா எப்போதுமே அவனுக்கு உடைமையான வஸ்துவே ஆகும். மேலும், ஈச்வரனுக்குச் சொந்தமான வஸ்துவாகிய ஜீவாத்மாவை அந்த ஈச்வரனே காப்பாற்றிக் கொள்ளட்டும் என்று ஜீவாத்மா எண்ணியபடி தன்னைச் சமர்ப்பணம் செய்வது என்பதே இந்த மந்த்ரங்களில் உள்ள நான்காம் வேற்றுமை உணர்த்துகிறது என்பதை வெளிப்படுத்தும்விதமாக, இந்த மந்த்ரங்களில் உள்ள நான்காம் வேற்றுமையானது ஸம்ப்ரதாநத்தை உணர்த்துகிறது என்பதை அஹிர்புத்ந்ய ஸம்ஹிதை (52-35, 36) கீழே உள்ளபடி உரைக்கிறது: நிசீபாவேந ஸந்த்யோத்யம் ஆத்மநோ யத் ஸமர்ப்பணம் விஷ்ண்வாதிஷு சதுர்த்தீ தத்ஸம்ப்ரதாந ப்ரதர்சிநீ - ஸர்வேச்வரனிடம் ஜீவாத்மாவைக் காப்பாற்றப்பட வேண்டிய பொருள் என்று சமர்ப்பணம் செய்தல் என்பது ஜீவாத்மா அடிமையாக உள்ளதால் உணர்த்தப்படுகிறது. இத்தகைய சமர்ப்பணம் என்பதே விஷ்ணு முதலான சொற்களில் காணப்படும் நான்காம் வேற்றுமையில் உள்ளதான ஸம்ப்ரதாநத்தைக் கூறுகிறது. நீசீபூதோ ஹ்யஸாவாத்மா யத் ஸம்ரக்ஷ்யதயா அர்ப்யதே தத் கஸ்மா இத்யபேக்ஷாயாம் விஷ்ணவே ஸ இதீர்யதே – அடிமையான ஜீவாத்மாவை, இந்த ஜீவாத்மா யாரால் காப்பாற்றப்பட வேண்டியவன் என்று எண்ணியபடி அளிக்கவேண்டும் என்றால், “விஷ்ணுவுக்கு” என்றே கூறப்பட வேண்டும். மேலே உள்ள ச்லோகங்களில் காணப்படும் “விஷ்ண்வாதிஷு” என்பதன் மூலம் “நாராயணாய” என்பதில் உள்ள நான்காம் வேற்றுமையும் விளக்கப்பட்டது.