Srimad Rahasyatrayasaram - ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 27.மூலமந்த்ராதிகாரம் (பத்தி 80)

ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 27.மூலமந்த்ராதிகாரம்

மூலம் – “யஸ்ய ப்ரஸாதே ஸகலா: ப்ரஸீதேயுரிமா: ப்ரஜா:” என்றும், “ப்ரஸந்நமபவத் தஸ்மை ப்ரஸந்நாய சராசரம்”, “ப்ரஸந்நோ தேவதேவேச” என்றும் சொல்லுகையாலே, அவன் ப்ரஸந்நனானால் ப்ரதிகூலராவார் ஒருவருமில்லை. இவ்வீச்வரனுக்கு “ஸுஹ்ருதம் ஸர்வபூதாநாம்” என்கிற ஆகாரம் ஸ்வபாவஸித்தம். ஆகாராந்தரம் சேதநருடைய ஆஜ்ஞாதிலங்கநமாகிற உபாதியடியாக வந்தது. அதுவும் அல்பவ்யாஜத்தாலே மாறும். “இத்தனை அடியரானார்க்கு இரங்கும் நம் அரங்கனாய பித்தனை” என்றார்களிறே.

– இராமாயணம் கிஷ்கிந்தாகாண்டம் (4-21) - யஸ்ய ப்ரஸாதே ஸகலா: ப்ரஸீதேயுரிமா: ப்ரஜா: - யாருடைய அனுக்ரஹம் இருந்தால் இந்த அனைத்து ப்ரஜைகளும் நமக்கு அனுக்ரஹம் செய்யவல்லவர்களாக ஆகிறார்களோ – என்றும், இதிஹாஸ ஸமுச்சயம் (33-141) - ப்ரஸந்நமபவத் தஸ்மை ப்ரஸந்நாய சராசரம் – கேசவன் மகிழ்ந்தால் அதன் காரணமாகவே தெளிந்த மனம் கொண்ட உன் விஷயத்தில் அனைத்து உயிர்களும் மனத்தெளிவு அடைகின்றன – என்றும், நரஸிம்ஹபுராணம் - ப்ரஸந்நோ தேவதேவேச – தேவர்களுக்கும் தேவனாகிய ஸர்வேச்வரன் மகிழ்ந்தபோது அனைத்து உலகங்களும் மகிழ்வுற்றா – என்றும் கூறுவதற்கு ஏற்ப, ஸர்வேச்வரன் நம்மைக் குறித்து மகிழ்ந்தான், நமக்கு எதிராக நடப்பவர்கள் யாரும் இருக்கமாட்டனர். இத்தகைய ஸர்வேச்வரனுக்கு, கீதை (5-29) - ஸுஹ்ருதம் ஸர்வபூதாநாம் – அனைத்து உயிர்களுக்கும் நண்பன் – என்னும் தன்மை இயற்கையாகவே உள்ளதாகும். அவன் யாரிடமாவது இத்தகைய தன்மை இல்லாமல் உள்ளான் என்றால், அந்த மனிதன் அவனுடைய கட்டளைகளை மீறி நடந்த காரணத்தால் மட்டுமே ஆகும். அத்தகைய நிலையும் மிகவும் சிறிய காரணத்தால் மாறிவிடும். திருமாலையில் (4) - இத்தனை அடியரானார்க்கு இரங்கும் நம் அரங்கனாய பித்தனை – என்றது காண்க.