Srimad Rahasyatrayasaram - ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 27.மூலமந்த்ராதிகாரம் (பத்தி 79)

ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 27.மூலமந்த்ராதிகாரம்

மூலம் – ஸுபாலோபநிஷத் ப்ரப்ருதிகளிலே ஸர்வாந்தர்யாமியுமாய் ஸர்வவித பந்துவுமாயிருக்கிற ஸர்வேச்வரன் நாராயணசப்தத்தாலே தேவதாந்தர வ்யாவ்ருத்தனாக ப்ரதிபாதிதனானான், லோகத்திலுள்ள ஸர்வபந்துக்களும் பகவத் ஸங்கல்பத்தாலே பந்துக்களானார்கள். “த்வமேவ மாதா ச பிதா த்வமேவ”, “எம்பிரான் எந்தை”, “பிதா த்வம் மாதா த்வம்” இத்யாதிகளிற்படியே நிருபாதிக ஸர்வவிதபந்து ஸர்வேச்வரன் ஒருவனுமே.

– ஸுபால உபநிஷத்தில் காணப்படும் வரிகள் மூலம் (மாதா பிதா ப்ராதா நிவாஸ: சரணம் ஸுஹ்ருத் கதிர் நாராயண: - தாய், தந்தை, சகோதரன், இருப்பிடம், ரக்ஷிப்பவன், நண்பன், அடையப்படும் இலக்கு ஆகிய அனைத்தும் நாராயணனே) அனைத்திற்கும் அந்தர்யாமியாகவும், அனைத்துவிதமான உறவினனாகவும் உள்ள ஸர்வேச்வரன், “நாராயண” என்னும் பதம் மூலம் மற்ற தேவதைகளைக் காட்டிலும் வேறுபட்டவன் என்று தெளிவாக உரைக்கப்பட்டான். அவனுடைய ஸங்கல்பம் காரணமாக உலகத்தில் உள்ள அனைத்து உறவினர்களும் நமக்கும் உறவினர்கள் ஆயினர். கீழே உள்ள வரிகளின்படி நாராயணன் ஒருவன் மட்டுமே, எந்தவிதமான காரணமும் இல்லாமல், இயற்கையாகவே, நமக்கு அனைத்துவிதமான உறவினனாக உள்ளான்: காந்தாரியின் வாக்கியம் - த்வமேவ மாதா ச பிதா த்வமேவ – நீயே தாய், நீயே தந்தையும் ஆவாய் பெரியதிருமொழி (1-1-6) - எம்பிரான் எந்தை ஸ்தோத்ரரத்னம் (60) - பிதா த்வம் மாதா த்வம் – நீயே தந்தை, நீயே தாய்